வியாழன், 19 மே, 2011

Good Morning Sir,
Please click this link 

Application Form
Information Brochure



With regard 

C.KANAGARAJ
9894717167

Following is the population of our voters(as given to party leaders to show our strength)
Gobichettipalayam---48000,
Bhavanisager-----45000,
Bhavani----37000,
Modakurichi----40000,
Thiruchengodu---25000,
Paramathi velu----27000,
Edapadi---15000,
Karur---20000,
Aravakurichi---32000,
Kinathukadavu---35000,
Pollachi--47000,
Thondamuthur--25000,
Krishnarayapuram--15000,
Ottanchatram---15000,
Athur--20000,
Coimbatore south---20000,
Perundurai----15000,
Goundampalayam--17000,
Anthiyur--25000,
Komarapalayam---15000,
Senthamangalam---10000,
Vedasandur----22000,
Natham---10000,
Singanallure---15000,
Sulur---17000,
Palladam---10000,
Pongalur---12000,
Tirupur----10000.

In addition to this our voters are also spread across 22 other constituencies. (The list includes Pooluva
vettuvagounder&Punnam vettuva gounder).

Regards,

கொங்கு வேட்டுவக்கவுண்டர் வீர வரலாறு

கொங்கு நாட்டுச் சமுதாய வரலாற்றில் வேட்டுவர் முக்கியமானதோர் இடத்தை வகிக்கின்றனர். இவர்கள் வேட்டையாடுதலை தமது முதன்மைத் தொழிலாகக்கொண்டிருந்தனர். கொங்கு நாட்டின் பூர்வ குடிகளான வேட்டுவர்.வேடன்,வெற்பன்,சிலம்பன்,எயினன், ஊரான், வேட்டுவதியரையன்,ஊராளி,நாடாழ்வான், முதலான பெயர்களாலும் அழைக்கப்பட்டனர். வரலாற்று காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இவர்கள் கொங்கு நாட்டில் வாழ்ந்து வந்தனர் என்பதனைச் சங்க இலக்கியங்களால் அறிகிறோம்.

ஆதாரங்கள்

கல்வெட்டுக்கள்,செப்பேடுகள்,புராணங்கள்,இலக்கியங்கள் ஆகியவற்றின் துணை கொண்டு வேட்டுவரின் வரலாறு பற்றி அறிந்து கொள்கிறோம். திருவெஞ்சமாக் கூடல். கரூவூர்,வெங்கம்பூர்,திருச்செங்கோடு,ஈரோடு,ஏழூர்,மூக்குத்திபாளையம்,பருத்திபள்ளி,வாழவந்தி அருகில் உள்ள குட்லாம்பாறை,அவினாசி,திருமுருகன் பூண்டி,இரும்பறை,பழமங்கலம்,அந்தியூர்,சங்ககிரி முதலான ஊர்களில் உள்ள கல்வெட்டுக்களும் தென்னிலை, ஊசிப்பாளையம்,திருச்செங்கோட்டுச் செப்பேடுகளும்,சோழன் பூர்வபட்டயமும், இலக்கியங்களும் வேட்டுவர் பற்றிய பல செய்திகளை எடுத்தியம்புகின்றன.கொங்கு நாட்டு நடுகற்களும்,புலிக்குத்திக் கற்களும் வேட்டுவரின் வீரத்தைப் பறை சாற்றுகின்றன.

பூர்வீகம்

இவர்களது பூர்வீகம் பற்றி ஒருமித்த கருத்து உருவாகவில்லை. கனகசபைப்பிள்ளை அவர்கள் இவர்களை நாகர் இனத்தவர் என்பார். புராணங்களும்,பழங்கதைகளும் இவர்களை குருகுலத்தவர் எனச் சுட்டும்.சைவ நாயன்மார்களுள் ஒருவரான கண்ணப்பரின் கால்வழியினரே வேட்டுவர் எனக்கருதுவோரும் உண்டு.இருப்பினும் இவர்கள் கொங்கு நாட்டின் பூர்வகுடிகள் (ஆதிகுடிகள்) என்பதுறுதி. வேட்டுவர் பிரமனால் படைக்கப்பட்ட ஆதிவமிசத்தார் என்று வேளாளர் புராணம் கூறும்.வேறு சில பட்டயங்கள் வேட்டுவர் முத்தரையரின்(முத்துராஜா) கால்வழியினர் எனச்செப்புகின்றன.முத்தரையரும், வேட்டுவரும் கண்ணப்பநாயனாரைத் தமது குலதெய்வமாக வணங்கி வருவதும் சிந்திக்கத்தக்கது.எட்கர் தர்ஸ்டன் அவர்களும் முத்தரையர்,வேட்டுவர்,வலையர் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டிருப்பதும் இங்கே நினைவு கூர்தற்குரியது.
இவர்களுள் 1.வேட்டுவன், 2.வேடன், 3.காவிலவன், 4.மாவிலவன், 5.பூவிலவன் எனும் ஐந்து பெரும் பிரிவுகள் இருந்தன.பிற்காலத்தில் இவர்கள் கவுண்டர் எனும் பட்டத்தைப் புனைந்து கொண்டனர்.
வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திய பாறை ஓவியங்களும் குகை ஓவியங்களும் கொங்கு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சித்திரிக்கப்பட்டிருக்கும் வேட்டைக்காட்சிகள், வேட்டுவரின் வாழ்கை முறையைச் சித்திரிப்பதாகவே உள்ளன.கொங்கு நாட்டில் காணப்படும் ஈமச்சின்னங்களும், புதைகுழிகளும், இறந்தோர் நினைவுகற்களும், பெருங்காலச் சின்னங்களும் வேட்டைத் தொழிலை மேற்கொண்ட வேட்டுவருடையதே என்று மேல் நாட்டறிஞர் எஃப்.ஏ.நிக்கல்சன் கருதுவார்.இதனால் வேட்டுவரின் தொன்மை புலனாகும்.

சங்க காலம்

சங்க காலத்தில் இவர்கள் வேட்டையாடுவதையும் ஆடுமாடு மேய்பதையும் தமது தொழிலாகக் கொண்டிருந்தனர்.அதே சமயத்தில் சிலர் போர்ப்படைகளில் வீரர்களாகப் பணிபுரிந்து,தமது வில்லாற்றலை வெளிக்காட்டினர்.அதே காலகட்டத்தில் வேட்டுவ குழுத்தலைவர் சிலர் குறுநில மன்னர்களாகவும் திகழ்ந்தனர். எடுத்துக்காட்டாகக் கோடை மலைத் தலைவனான கடிய நெடுவேட்டுவன்,தோட்டி மலைதிதலைவனான கண்டீரக்கோப் பெருநற்கிள்ளி,கொல்லி மலைத்தலைவனான வல்வில் ஓரி,கொடுமுடி முதலியோரைச் சுட்டலாம். சிலர் வழிப்பறி செய்யும் ஆறலைக் கள்வர்களாகவும் விளங்கினர்.

முன்னேற்றம்

ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல் அலைந்து திரிந்து வேட்டைத் தொழிலை மேற்கொண்ட வேட்டுவருள் பலர்,சிலகாலம் சென்ற பின்னர் ஓரிடத்தில் நிலைத்து வாழ்ந்தனர்.உணவு தேடும் நிலையை விட்டு உணவு உற்பத்தி செய்யும் நிலைக்கு முன்னேறினர்.சமவெளிகளில் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டனர்.இதுவே வேட்டுவர் வாழ்வில் நிகழ்ந்த மாபெரும் புரட்சி எனலாம்.இவர்களை வெளாளர்(வேளாளர்) என சோழர்காலக் கல்வெட்டுகள் கூறுகின்றனர்.வரலாற்றுத் தொடக்க காலத்தில் வேட்டைத் தொழிலில் ஈடுபட்ட இவர்கள், இடைக்காலத்தில் வேளாண்மையில் நாட்டம் கொள்ளும் அளவிற்கு உயர்ந்தனர்.

சோழர் காலம்

கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் முதல் ஆதித்த சோழன் இராசாவேடர்களை வென்று, கொங்கு நாட்டைக் கைப்பற்றினான். இதனால் வெள்ளாளர் என்போர் வேட்டுவரின்றும் தோன்றியவர்களே என்பது புலனாகும். சிலர் மட்டும் வேட்டுவர்களாகவே இருந்தனர். இதன் விளைவாகக் கொங்கு நாட்டின் பல பகுதிகளில் குறுநில மன்னர்களாகத் திகழ்ந்த வேட்டுவத் தலைவர்கள், சோழரது படைத்தலைவர்களாக மாற்றப்பட்டனர். சோழர்கள் கொங்கு நாட்டில் வேளாண்மையைப்பெருக்க பல அரிய முயற்சிகளை மேற்கொண்டனர். சோழரின் ஆதிக்கம் கொங்குநாட்டு வரலாற்றில் ஒரு திருப்பு முனை எனலாம். கி.பி.பத்தாம் நூற்றாண்டளவில் தொண்டை நாட்டிலிருந்தும், சோழநாட்டிலிருந்தும் கொங்கில் குடியேற்றப்பட்ட வேளாளர்கள்(கொங்கு வேளாளர்) நீர்ப் பாசனத்துடன் கூடிய விவசாயத்தை விரிவுபடுத்தனர். கல்வெட்டுகளில் வேளாளர்கள் கி.பி.பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே குறிப்பிட பெறுகின்றனர் என்பது இங்கே நினைவு கூறத்தக்கது.

சமுதாய வாழ்வில் வேட்டுவர்-வெள்ளாளர் நிலை

கி.பி.பத்து-பதினாறாம் நூற்றாண்டுகளில், வேளாளர்கள் மிகச் சிறந்த முறையில் வேளாண்மையை முன்னேற்றி, உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து,பொருளாதாரத் துறையில் பெரிதும் முன்னேறினர். கொங்கு நாட்டின் பூர்வ குடிகளான வேட்டுவரின் பொருளாதார நிலை சிறிது தாழ்ந்தது. சில இடங்களில் வேட்டுவர்க்கும், வேளாளர்க்கும் போட்டியும் பூசல்களும் ஏற்பட்டன. கி.பி.12-13 ஆம் நூற்றாண்டுகளில் இருவர்க்குமிடையே சமரசமும், சமாதானமும் ஏற்பட்டன. வேட்டுவரின் நில உரிமைகளும்,கோயில் வழிபாட்டு, முப்பாட்டு உரிமைகளும் வேளாளர் கைக்கு மாறின.வேட்டுவர்-வேளாளரிடையே நிகழ்ந்த காணியாட்சி உரிமை மாற்றம், வேளாளரின் பொருளாதார உயர்ச்சி ஆகியவை பற்றிய செய்திகள் சோழன் பூர்வபட்டயம் எனும் சாசனத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. வேட்டுவர்களைப் போன்று வேளாளர்களும் தமக்குள் கூட்டப் பெயர்களைப்(குலம்) பூண்டனர்.

வேட்டவூர்,பூலுவ ஊர்,பூலுவ நாடு

வேளாளரைப் போன்று வேட்டுவரும் தமக்கெனத்தனியான சமூக அவைகளைக் கொண்டிருந்தனர்.வேளாளர் ஊர் அளவில் வெள்ளாளனூர் (வேளாளர் ஊர் அவை) அமைப்பைப் பெற்றிருந்தது போன்று வேட்டுவரும் வேட்டவூர் (வேட்டுவர் ஊர் அவை) அல்லது பூலுவ ஊர் எனும் அமைப்புக்களைக் கொண்டிருந்தனர். அடுத்து பூலுவ ஊரார் இணைந்து பூலுவ நாடு எனும் நாட்டர் அவையையும் கொண்டிருந்தனர். எடுத்துக்காட்டாக அன்னூரிலிருந்து பூலுவ ஊர், சேவூரிலிருந்து பூலுவ ஊர், திங்களூரில் இருந்த வேட்டவூர், விசயமங்கலத்தில் செயல்பட்டு வந்த வேட்டவூரைச் சுட்டலாம்.
வேட்டுவ வீரர் பலர் சோழரது படையில் பணிபுரிந்து, சோழரது மேலாதிக்கம் பரவ பாடுபட்டனர். எடுத்துக்காட்டாக அழகன் காளி எனும் வேட்டுவத் தலைவன் முதல் இரசேந்திர சோழனின் வெற்றிக்காகப் போராடி வீர மரணம் அடைந்ததனைக் குறிப்பிடலாம். இதனைக் கூறும் தூக்காச்சிக் (ஈரோடு வட்டம்) கல்வெட்டைக் கீழே காண்போம்.
“ஸ்வஸ்திஸ்ரீ பூர்வதேசமும் கங்கையும்......
            சோழர்க்குச் செல்லா நின்ற யாண்டு
            ........ஊராளி வேட்டுவன் அழகன்
            காளி அவன் இதில் பட்டான்.”
சோழருக்குப் பின்னர் சோழரை அடுத்துப் பிற்காலப் பாண்டியரும் ஒய்சாளரும் கொங்கு நாட்டில் மேலாண்மை செலுத்தினர். பாண்டியர் வில்லாற்றல் மிக்க வேட்டுவ வீரர்களைப் பெருமளவில், தமது படையில் சேர்த்துக்கொண்டனர். கொங்கில் மேலாண்மையைச் செலுத்திய சுந்தர பாண்டியனின் ஆட்சிக்காலத்தில்(1252 – 1271) அந்தியூரன் எனும் வேட்டுவத் தலைவன், திருச்செங்கோட்டுப் போரில் பாண்டியரது பக்கம் நின்று போரிட்டு மாண்டான் என்பதனைச் சேலம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நடுகல் கல்வெட்டால் அறிகிறோம். இதோ அக்கல்வெட்டு.
“ஸ்வஸ்தி ஸ்ரீ சுந்தரபாண்டியா
          தேவற்கு யாண்டு 6 – வது
          வடகரை நாட்டு உரகடங்கச்சதி
          கண்ணையன் வேட்டுவரில்
          அந்தியூரன்”

பட்டக்காரர்கள்

விசயநகர வேந்தரது ஆதிக்கம் கொங்கு நாட்டில் பரவிய போது, வேட்டுவரும் வேளாளரும் பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் பட்டக்காரர் எனவும் அழைக்கப்பட்டனர். வேட்டு பட்டக்காரர் எனவும் அழைக்கப்பட்டனர், தென்னிலை, காக்காவாடிப் பட்டக்காரர்கள் குறிப்பிடத்தக்கவர் ஆவர். இதே காலக்கட்டத்தில் வேட்டுவத் தலைவர் சிலர் அரண்மையாளர்களாகவும் திகழ்ந்தனர். இவர்களுள் கொடையூர் சீத்தப்பட்டி, நிமந்தப்பட்டி, நவமரத்துபட்டி, நல்லகுமரன் பட்டி, இழுப்பக்கிணத்துப்பட்டி, அரண்மனையாளர்கள் புகழுடன் விளங்கினர். வேட்டுவத் தலைவருள் பலர் காணியாளர்களாகவும் ஊராளிகளாகவும் திகழ்ந்தனர். இதனைப் பல கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன.
மேற்கூறியவற்றான் வேட்டைத் தொழிலை முதன்மையாகக் கொண்டிருந்த வேட்டுவர், நாளடைவில் படைவீரர்களாகவும்படைத் தலைவர்களாகவும், காணியாளர்களாகவும், ஊராளிககளாகவும், திகழ்ந்தமை அறியப்படுகின்றன. சிலர் காடுகளை அழித்து கழனிகளாக மாற்றி வேளாண்மைத் தொழிலிலும் ஈடுபட்டனர் இவர்கள் பழங்கொங்கு நாடு முழுவதும் வாழ்ந்து வந்த போதிலும் வடகொங்கில் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். காவிரி, நொய்யல், அமராவதிப்படுகைகளில் அவர்களது குடியிருப்புகள் மிகுதியாகவே இருந்தன.

வேட்டுவரின் குலப்பிரிவுகள்

வேர்வகையை எண்ணினாலும் வேட்டுவர் வகையை எண்ண முடியாது – என்பது பழமொழி. ஆம் வேட்டுவரிடையே எண்ணிறந்த குலப்பிரிவுகள் இருந்தன என்பதைக் கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் அறிகிறோம். இது காறும் ஏறத்தாழ 203 வேட்டுவரது குலப்பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வேட்டுவரின் வீரப்பண்பு

கொங்கு நாட்டில் காணப் பெறுகின்ற நடுகற்கள், புலிக்குத்திக் கற்கள் ஆகியன வேட்டுவரின் வீரத்தையும், அஞ்சாமையும் பறைசாற்றுகின்றன. எடுத்துக்காட்டாக கரையகுல சொக்கனின் பெருவீரத்தைப் போற்றிப் புகழும் பழமங்கலம்(பெரியார் மாட்டம்) நடுகல் கல்வெட்டைச் சுட்டலாம். அக்கல்வெட்டைக் கீழே காண்போம்.
“வாய்த்த புகழ் மங்கலத்து வந்தெதிர்த்த மாற்றலரைச்
              சாய்த்த மருள் வென்ற சயம்பெருகச் சீர்த்த புகழ்
              நிக்குவனம் கற்பொறிக்கப்பட்டான் கரைய குலச்
              சொக்கனேந்தலேவுலகிற் காண்.
              இக்கற்பொறி ரகூஷிப்பான் பாதம்என் தலை மேலே”
“வெட்ட வெட்டத் தலைக்குது வேட்டுவர் படை எனும்” முதுமொழியும் வேட்டுவரின் வீரத்திற்கோர் இலக்கியமாகத் திகழ்கிறது.
புலியைக் குத்திக் கொல்லுவதில் இவர்கள் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். இதன் நினைவாகக் கொங்கு யநாட்டில் பல புலிக்குத்திக்கற்கள் காணப்படுகின்றன. புலியைக் குத்தியதன் நினைவாகப் பலர் புலிக்குத்தி எனும் பட்டத்தையும் தமதுபெயருடன் சூட்டிக்கொண்டனர். இதனைப் பாண்டிய வேட்டுவரில் வீரன் புலிகுத்திதேவன் எனக் குறிப்பிடும் வெள்ளோட்டுக் கல்வெட்டாலறியலாம்.

வேட்டுவரின் பொதுப்பணி

கால்வாய் வெட்டுதல், அணைகட்டுதல், குளம் வெட்டுதல், நீர்பாசனத்தைப் பெருக்குதல், ஊரில் புகுந்து மக்களுக்கும்,மாக்களுக்கும், தீங்கு விளைவிக்கும் கொடிய மிருகங்களைக் கொல்லுதல் – முதலான பொதுப்பணிகளிலும் வேட்டுவர் ஈடுபட்டிருந்தனர் என்பதைக் கல்வெட்டுச் சான்றுகளால் அறியலாம். வேளாண்மையின் உயிர்நாடியாக, அச்சாணியாக விளங்கும் நீர்பாசனத்தைப் பெருக்குவதில் வேட்டுவத் தலைவர்கள் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தனர்.
சேலம் மாவட்டம் வடகரை ஆற்றூரில் வாழ்ந்து வந்த அல்லாளன் இம்முடித்திருமலை இளையான், காவிரியிலிருந்து ராஜ வாய்க்கால் எனும் கால்வாயை வெட்டினான், ஜேடர் பாளையத்திலிருந்து வேலூர் வழியாகப் பாலப்பட்டி வரை சென்று ஒடுவந்தூரில் முடிவடையும் இது காவிரியில் வெட்டப்பட்ட முதல் கால்வாய் என்பது குறிப்பிடத்தக்கது.
பூச்சந்தை வேட்டுவன் பெரிய பெருமாள் முத்தாண்டன் என்பான், வடபரிசார நாட்டு நவிரையான கப்பலன் கிடாரன் எனும் ஊரில் தாமரைக்குளம் ஒன்று வெட்டினான். பெரிய விளங்கி ஊராளியான சுண்டை வேட்டுவன் எழுகரை நாட்டில் அக்கசாலைக் கங்கை எனும் பெயரில் குளம் ஒன்று வெட்டினான். இதனைக் கீழ்காணும் கல்வெட்டு விளக்குகிறது.
“ஸ்வஸ்தி ஸ்ரீ எழுகரை நாட்டு அக்கைசாலை
           கங்கை என்று பேரிட்டு இக்
           குளம் அட்டினேன் பெரிய விலங்கி
           ஊராளியாகிய சுண்டை வேட்டுவன்
           சிலம்பன் சிறியன் ஆன எழுக
           ரை நாட்டு அக்கை சாலைகள் மாத்த
           ஆராத பிள்ளையேன் பேர் மலை”
(சேலம் மாவட்டம், மூக்குத்தி பாளையம் அருகில் மோழப்பறையில் உள்ளது)
இதனைப் போன்று வேட்டுவர் நீர்பாசனத்தைப் பெருக்க பல பணிகளைச் செய்துள்ளனர் என்பது கல் வெட்டுகளால் புலனாகிறது.

இறைப்பணி

பொதுப்பணியில் பேரார்வம் காட்டிய வேட்டுவர் திருக்கோயில்களைக் கட்டுவதிலும், அதில் புதிய கட்டுமானப்பணிகளை மேற்கொள்வதிலும், இறைவனது திருவுருவங்களை எழுந்தருளச் செய்வதிலும், கோயில் வழிபாடு சிறப்புற நடைபெற நிலக்கொடைகள் விடுவதிலும் ஆர்வம் காட்டினர். இதனைக் கல்வெட்டு ஆதாரங்களால் அறியலாம். எடுத்துக்கட்டாகப் பெரியார் மாவட்டம் அறச்சலூர்க் கல்வெட்டை சுட்டாலாம். இதோ அக்கல்வெட்டு.
“ஸ்வஸ்திஸ்ரீ ஒய்சள புஜபல வீரவல்லாள
          தேவர்பிருத்வி ராஜ்யம் பண்ணி ஆருளா
          நின்ற யுவ சம்வத்சரத்துத் தை
          மாதத் தொருநாள் மேல்கரைப்
          பூந்துறை நாட்டு அறச்சலூரில்
          கரைய வேட்டுவரில் செய்யான்
          பல்லவரையனேன் இவ்வூர் புற்றிடங்
          கொண்டநாயனார் கோயிலில்
          திருக்கட்டளையில் திருநிலைக் காலும்
          படியும் செய்வித்தேன்.”
          
         (புலவர் செ.இராசு அவர்கள் படித்தது)
வெங்கட்சி வேட்டுவன் ஒருவன் சங்ககிரி வட்டத்திலுள்ள மருதூரில் காளியம்மன் கோயிலைக் கட்டினான். அதியமான் நடுவில் நங்கன் என்பான் பருத்திபள்ளிச் சிவன் கோயிலைப் புதுப்பித்தான். கல்லை வேட்டுவனான குறுஞ் சொக்கன் உலகடம் உலகேஸ்வரர் கோயிலில் அர்த்த மண்டபத்தையும், பின்னப்படுத்தப்பட்ட இத் திருக்கோயிலைப் புதுப்பித்துக் குடமுழுக்கும் செய்வித்தான்.(கி.பி.1643)

இந்த உலகம் விசித்திரமானது. இதில் உள்ள மக்கள் ஆச்சர்யமான இயல்பு உடையவர்கள். தாங்கள் வளர வேண்டும் என்ற தீவிரமான எண்ணம் உடையவர்களால் தான் உலகம் முன்னேறுகிறது. புதிய புதிய மாற்றங்களை உலகம் பெறுகிறது. ஆனால் இந்த நேர்மறையான எண்ணத்தோடு உலகம் நிறைவு பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தான் வாழ வேண்டும். வளர வேண்டும் என்பதோடு நில்லாமல் பிறர் அழிய வேண்டும் என்கிற குரூரமான எண்ணமும் எதிர்மறையான மனோபாவமும் இங்கிருப்பதுதான் உலகத்தின் சகல சிக்கல்களுக்கும் காரணம். பல குடும்பங்கள் முன்னேறாமல் போனதற்கு இந்தக் குணம்தான் காரணம். "நான் நன்றாக இருக்க வேண்டும்" என்று மணிக்கணக்காகக் கடவுளிடம் வரம் கேட்கும் சிலர் "நீ விளங்கமாட்டே.. நல்ல இருக்க மாட்டே.." என்று நெருங்கிய உறவுகளைக்கூடக் கோபத்தில் சாபம் வழங்கி ஏசுகிறார்கள். எல்லோரும் வளர்ந்தால் உலகம் வளரும். ஒருவர் வளர்ந்து மற்றவர் கீழே போனால் அது முழு வளர்ச்சியாகுமா? அடுத்து என்ன நடக்கும்? கீழே போனவர் சும்மா இருப்பாரா? அவர் நாலு கோவிலுக்குப் போய் வேண்டுவார்.. என்ன வேண்டுவார்? "என் எதிரி இன்று நல்லா இருக்கிறானே! அவன் வாழலாமா! அவன் வளரலாமா! கடவுளே உனக்கு கண் இல்லையா? அந்தப் பயல் தெருவில் நிற்க வேண்டமா! அவன் கஷ்டப்படுகிற காட்சியை என் கண்ணால் நான் பார்க்க வேண்டாமா?" என்று வேண்டுவார்.

அவரது சாபம் இவரை வீழ்த்தும். இவரது சாபம் அவரை வீழ்த்தும். மொத்தத்தில் இருவரும் ஆரம்பித்த இடத்திலையே இருப்பார்கள். ஒருவரை ஒருவர் வளர விடாமல் செய்வதால் இருவருமே வளர முடியாது. ஒருவரை ஒருவர் ஓடவிடாமல் தடுப்பதால் இருவருமே ஓட முடியாது. இருவருமே புறப்பட்ட இடத்தில் இருக்க வேண்டியதுதான்.! இந்த உண்மையை ஏன் பலர் புரிந்து கொள்ளவில்லை.!

"நான் நன்றாக இருக்க வேண்டும்" என்று மட்டுமே வேண்டுவது சுயநலம் என்றாலும் அதில் பெரிய குற்றம் இல்லை. ஆனால் உத்தம மனம் உடையவர்கள் "ஸர்வ லோகோ சுகினோ பவந்து" என்றுதான் வேண்டுவார்கள். "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே" என்று வேண்டுகிற தாயுமானவர் தமிழே நம் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.

பலவிதமான நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், பண்பாட்டு வாழ்வியல் முறைகள் உடையதே உலகம். உலகில் வாழ்பவர் ஒருவரை ஒருவர் வெறுக்காமல், பகைக்காமல், பிறரையும் பிறரது நம்பிக்கைகளையும், உணர்வுகளையும் பழிக்காமல் புரிந்து கொள்ள கொஞ்சம் அக்கறையும் முயற்சியும் வேண்டும்.

மானிட பண்பாளர்களுக்குரிய தகுதியை நம்மில் வளர்த்துக் கொள்வோம், எமது கண்ணில் பிறருக்காக அழுவோம். பிரச்சனைகளாகவல்ல, தீர்வின் அங்கமாக நாம் இருப்போம். பிறக்கவிருக்கும் புதிய ஆண்டோடு சேர்த்து நம்மையும் புதிதாக பிறப்பித்துக்கொள்வோம். மாற்றம் ஒன்றே மானிட தத்துவம். மாற்றம் என்ற சொல்லைத் தவிர உலகில் அனைத்தும் மாறிவிட வேண்டும். எமது பண்புநலன் உட்பட. பண்பாளர்களுக்குரிய குணநலனைக் கொண்டு நம்மை பரிசோதித்து சீர்படுத்திக் கொள்வோம்.


01.பண்பாளர்கள் தெளிவாகவும், தர்க்கரீதியாகவும் சிந்திக்கிறார்கள். தைரியத்துடனும் கண்ணியத்துடனும் வாழ்கிறார்கள். விருப்பத்துடனும் பெருந்தன்மையுடனும் கொடுக்கிறார்கள். அன்புடனும் பெரிய மனதுடனும் மன்னிக்கிறார்கள்.

02.தனிச்சிறப்புரிமைகளைவிட கடமைகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு; பாதுகாப்பைவிட சுதந்திரம் மதிப்பு மிக்கது என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

03.கல்விக்கு கரையேதும் இல்லை: வாழ்க்கை என்பது முடிவே இல்லாத வளர்ச்சி இயக்கம் என்பதை அறிந்திருக்கிறார்கள்.

04.அழகின் சாரம் எளிமைதான் என்பதையும், நேர்மை தான் பண்புநலனின் அஸ்திவாரம் என்பதையும் புரிந்து வைத்திருக்கறார்கள்.

05. அளவற்ற செல்வத்தைவிட மகத்தான கருத்துக்கள்தான் நிரந்தரமானவை: அலங்காரச் சொற்களை விட நிதர்சனமாக எடுத்துக்காட்டுகள் கற்றுத்தருவது அதிகம் என்பதை புரிந்து கொள்கிறார்கள்.

06. கற்றுக் கொள்ளுதல் என்னும் மெழுகுவர்த்தியில் ஆர்வம் என்பது திரியைப் போன்றது, வியப்பு என்பது சாகசங்கள் மற்றும் சாதனைகளை ஒளியேற்றுகிற நெருப்புப்பொறி என்பதை அறிந்திருக்கிறார்கள்.

07. தமது உள்ளங்களில் நன்றியுணர்வை நிரப்பி வைத்திருக்கறார்கள்: தம்மைப் படைத்தவனுக்கும் சக மனிதர்களுக்கும் தமது நன்றியை வெளிப்படுத்துவதில் புதிய வழிகளைக் கற்று கொண்டிருக்கிறார்கள்.

08. புதிய சவால்களை, வெவ்வேறு பண்பாடுகளை, பழக்கமில்லாத வழக்கங்களை, எதிர்மறையான கருத்துக்களை வரவேற்கிறார்கள், மதிக்கிறார்கள், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்கள்.

09.அறிவுத்தாகம், உண்மையின் தேடல், ஞானத்தை அடைதல் இவற்றை எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

10. தமது எல்லைகள் என்ன என்பதை அறிவார்கள், ஆயினும் சாத்தியக்கூறுகளில் கவனம் செலுத்துகிறார்கள். தமது தனிச்சிறப்பை அறிந்திருந்தாலும் மனித குலத்துடன் ஒன்றிவாழ்வதை மதிக்கிறார்கள்.

இவை எம்மை பரிசோதிப்பதற்கான அளவு கோல். முதலில் மாற்றத்தை நம்மில் காண்போம். மானிடம் சீர்பட இலட்சிய வடம் இழுப்போம், அனைவரின் மனதிலும் இடம் பிடிப்போம், புதிய பாதையில் தடம் பதிப்போம். உடலைப் பலப்படுத்தி, மனதை செப்பமிட்டு குழந்தை மனதுடனும் நிறைந்த பண்புடனும் சிகரம் நோக்கி சிங்க நடை போடுவோம். உலகினில் எல்லோரும் உறவென்று சொல்வோம்; அன்பென்னும் இராஜாங்கம் அமைந்திடச் செய்வோம்.
போன காலங்கள் போகட்டும்: இனி புதிய வரலாறு படைப்போம்...!

அண்ணன்மார் கதை; சின்னண்ணன், பெரியண்னன் கதை என்றெல்லாம் அழைக்கப்படும் பொன்னர் சங்கர் கதை தமிழகத்தின் மேற்கு பகுதிகளான கோவை  ஈரோடு நாமக்கல் கரூர் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம்,ஆகிய பகுதிகளில் குறிப்பாக வெள்ளாளக் கவுண்டர்கள் பெரும்பான்மையாக வாழும் இப்பகுதிகளில் நாட்டார் கதையாகவும், நோம்பி காலங்களில் கிராமங்களில் போடும் தெருக்கூத்துக்களாகவும், நாடகங்களாகவும் இருக்கிறது.
இப்படி ஒரு வரலாற்று பாரம்பரியமான அண்ணன்மார் கதை பொன்னர் சங்கர்  கதையாக கருணாநிதியால் கூர்மைப்படுத்தப்பட்டது.  அதன் பிறகு, கருணாநிதியின் அண்ணன்மார் கதையை தியாகராஜன் இயக்கி பிரசாந்த் நடிக்க பலகோடிகளை செலவழித்து பிரமாண்டமாக உருவாக்கியிருக்கிறார்கள், படமும் வெளிவந்துவிட்டது.
சரி!  அப்படி என்ன அண்ணன்மார்களிடம் இருக்கிறது அவர்கள் என்ன தீரன் சின்னமலை,கட்டபொம்மன் போன்று வெள்ளையனுக்கு எதிரான போரில் வீரமரணம் எய்திய மாவீரர்களா? பொன்னர் சங்கர் வாழ்க்கை வரலாறு நம் மக்களுக்கு சொல்லுகின்ற பாடம்தான் என்ன? எதற்காக அண்ணன்மார் கதையை கருணாநிதி மீள் உருவாக்கம் செய்தார்?
தான் கோவையில் வாழ்ந்த காலத்தில் அண்ணன்மார் கதையை கேட்டு ரசித்து  பொன்னர் சங்கர் கதையை எழுதியதாகவும் மு.க சொல்லியிருக்கிறார். தந்தை பெரியாரின் பாசறையில் வளர்ந்ததாக சொல்லிக்கொள்ளும் மு.க வை அணணன்மார் கதை கவர்ந்திழுத்திருக்கிறதே , அப்படியானால் கதையில் பார்ப்பன, பார்ப்பனிய இந்துத்துவா எதிர்ப்பு எதாவது இருக்குமா என்று தேடி பார்த்தால் ம்ஹும்… ஒரு வெங்காயமும் இல்லை.
கொங்கு வெள்ளாளக்கவுண்டர்களின் தலைவர்களான பொன்னர் , சங்கர் இருவரும் அண்ணன் தம்பிகள், இவர்களின் தங்கை அருக்காணி இவர்கள் வாழ்க்கை தான் அண்ணன்மார் கதை    இவர்களுக்கும், கொங்கு நாட்டு வேட்டுவ கவுண்டர்களின் தலைவனான தலையூர்காளிக்கும் இடையிலான சண்டையும் அதன் முடிவில் அண்ணன்மார்கள் இறப்பதே இக் கதை.  இக்கதை நடந்த காலகட்டம் பதினைந்தாம் நூற்றாண்டு என்று கூறப்பட்டாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.  இப்படி ஒரு கதை நடந்ததா அல்லது எவனாவது கரடி விட்டுட்டு போயிட்டானா? என நாம் சந்தேப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகமுள்ளன.
பொன்னரும் சங்கரும் இறந்த பின்பு அவர்கள் கடவுளாக்கபட்டு ஊர் ஊருக்கு கோயில் கட்டபட்டுள்ளது . கோயில் கட்டி கும்பிடும் அளவிற்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் வேளாளக்கவுண்டர் சாதிக்காக வேட்டுவகவுண்டர்களிடம் சண்டை போட்டதுதான்.
அதுவும் கொடூரமாக வேட்டுவர் மக்களை வீழ்த்தியிருக்கிறான் பொன்னர்.கீழேயுள்ள அண்ணன்மார் பாடல்களில் பொன்னர் வேடுவர்களுக்கு எதிரான போரில் வேட்டுவர்களின் ஆண் குழந்தைகளையயல்லாம் தலையை வெட்டி கொன்றதாக கூறுகிறது.
“கிழக்கு வளநாடு கீர்த்தி உள்ள மேனாடு
 பெரிய மலையாளம் பெம்ந்துறையும் நன்னாடு
 வேடுதளம் உள்ளதெல்லாம் பொன்னர் வெட்டிக் கருவறுத்து
 ஆணென்று பிறந்ததெல்லாம் பொன்னர் அறுத்துச் சிரமறிந்தார்”
இப்படி வெள்ளாளர்களுக்கும் வேடுவர்களுக்கும் இடையிலான போரில் அண்ணன்மார்கள் மட்டும் வீரசிங்கங்களாக்கப்பட்டது ஏன்? 
வேடுவர்கள் மீதான பகையும் அதை தொடர்ச்சியாக வளர்த்தெடுப்பதற்கும் அண்ணன்மார்கள் கதை பயன்படுத்தபடுகிறது. கொங்கு நாட்டின் மண்ணின் மைந்தர்களான வேடுவர்கள் இப்பகுதியில் வேட்டையாடி தொழில் செய்து வருகின்றனர் அப்போது அங்கு பிழைப்புக்காக வந்த வந்தேறிகளான கொங்கு வெள்ளார்களுக்கும்  வேடுவர்களுக்கும் போர் நடநதாக கொங்குவேளாளர்கள் வரலாற்றில் கூறப்படுகிறது. என்றோ ஒரு காலத்தில் எவனோ ஒரு வேட்டுவனுக்கும் வெள்ளாளனுக்கும் இடையே நடந்த சண்டையை இன்னும் ஞாபகம் வைத்துக்கொண்டு கோயில் நோம்பிகளில் நாடகம் போட்டு பகையயை வளர்த்த வேண்டிய அவசியம் என்ன? ஒட்டுமொத்த வேட்டுவர்களையும் திருடர்களாக காட்டுவதை அனுமதிக்கவேண்டுமா?
இந்த அணணன்மார் நாடகங்களையும் கோயில்களையும் எந்தவொரு வேட்டுவனும் ரசிப்பதில்லை, ஒரு சாதியையே திருடனாக அழைப்பதை யார் தான் ஏற்று கொள்வார்கள்.
இன்றைய காலகட்டங்களில் குறிப்பிட்ட இரு சாதியினரும் நண்பர்களாக இருந்தாலும் இது போன்ற கதைகள் சாதி பகையை மூட்டி விடுகின்றன. அது ஏற்படுத்தும் பின் விளைவுகள் இன்றும் தொடர்கின்றன. கொங்கு இளைஞர் பேரவையின் அமைப்பாளர் தனியரசு சில ஆண்டுகளுக்கு முன் வேட்டுவக் கவுண்டர்கள் அதிகமாக வாழும் நாமக்கல் மாவட்டம் பூசாரிப்பட்டியில்  அவர்களை வமபுக்கு இழுத்து  ஒரு கலவரத்தையே உண்டாக்கினான். அதன் பின்னணியில் பொன்னர் சங்கர் கதையிருப்பதை மறுக்க முடியாது. அன்று வேட்டுவனாகவும் வெள்ளாளனாகவும் இருப்பவன் இப்போதும் அதே சாதியாக இருப்பான் என்று கூறமுடியாது.
இந்ந கதை  மூதறிஞர்(!) கருணாநிதியை கவர்ந்திழுக்க காரணம் என்ன?
ஓட்டு.
ஆம்! ஓட்டு பொறுக்குவதற்காக வேட்டுவன்களை தாழ்த்தியும் வெள்ளாளன்களையும் உயர்த்தியும் இக்கதையை மெருகேற்றியுள்ளார் மு.க., அதற்கு காரணம் கொங்கு பகுதியில் வேட்டுவக்கவுண்டர்கள் சிறுபான்மை சமூகத்தினராகவும் பொருளாதாரரீதியில் பின் தங்கியும்உள்ளனர். ஆனால் வெள்ளாளக்கவுண்டர்கள் பெரும்பான்மையுடனும், பொருளதார பின்னணியுடனும் உள்ளனர்.
ஒரு வேளை, வேட்டுவர்கள் பெரும்பான்மையினராக இருந்திருந்தால் மு.க பொன்னர் சங்கர் எழுதியிருக்கமாட்டார். மாவீரன் தலையூர் காளி என்ற வீர புராணத்தை எழுதியிருப்பார்.
தலையூர் காளியும் பொன்னர் சங்கரும் வேட்டுவர் சாதியைசேர்ந்தவர்கள் என்ற கருத்தும் உள்ளது இப்படி சம்பந்தப்பட்டவர்கள் என்ன சாதி என்பதிலும் பல கருத்து நிலவுகிறது .
இன்றையக் காலக்கட்த்தில் இப்படி ஒரு கதை தேவையா . இந்த டுபாக்கூர் சாதி வெறி கதையை ரசித்து எழுதியதாக சொல்லும் கருணாநிதிக்கு சாதி ஒழிப்பு வீரரான பெரியாரின் பெயரை சொல்லும்  தகுதி கூட கிடையாது.
நடந்ததா என்ற ஐயத்துக்குறிய கதையை எழுதும் கருணாநிதி   வெள்ளையர்களுக்கெதிரான காலனியாதிக்க போரில் வீரமரணம் அடைந்த மாவீரன் பகத்சிங்கின் கதையை எழுதுவாரா?  ஒரு வேளை பகத்சிங்கின் சாதியினர் தமிழ்நாட்டில் வாக்கு வங்கிகளாக இருந்திருந்தால் எழுதியிருந்தாலும் எழுதியிருப்பார் .

அன்பு உறவினர்களுக்கு வணக்கம்

அன்பு உறவினர்களுக்கு வணக்கம்
நமது சமூக வரலாறு வேட்டுவக்கவுண்டர் org யில் வெளியாகி உள்ளது.அனைவரும் பார்க்கவும்.இந்த கட்டுரையை யாரும் காபி பேஸ்ட் செய்து மெயிலோ, பிளாக்கிலோ போட வேண்டாம். இது காபி ரைட்
மெட்டீரியல். அனைத்து உறவுகளுக்கும் இந்த கட்டுரையின் லிங் கொடுங்க நேரடியாக சைட்டுக்கு சென்று
பார்வையிடட்டும்.நமது சமூக வரலாற்றைப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்
அன்புடன்
ஆர.முத்துசாமி

சங்க இலக்கியங்களில் வேட்டுவர்                  "வீரத்தாலொரு வேடுவனாகி"
                                      -(தேவாரம். 485, 4)

கண்ணப்பநாயனார்:  "வேடரதி பதியுடுப்பூர் வேந்த னாகன்
      விளங்கியசேய் திண்ணனார் கன்னி வேட்டைக்
  காடதில்வாய் மஞ்சனமுங் குஞ்சிதரு மலருங்
      காய்ச்சினமென் றிடுதசையுங் காளத்தி யாருக்குத்
  தேடருமன் பினிலாறு தினத்தளவு மளிப்பச்
      சீறுசிவ கோசரியுந் தெளியவிழிப் புண்ணீ
  ரோடவொரு கண்ணப்பி யொருகண் ணப்ப
      வொழிகவெனு மருள்கொடரு குறநின் றாரே"
                          - கண்ணப்பநாயனார் புராணம்.
       ‘மவுலி வேதியர் முன் எழுந்தருளி, 
        வன் திறல் வேடுவன் என்று மற்றவனை நீ நினையேல்,
        நன்று அவன் தன் செயல் தன்னை நாம் உரைப்பக் கேள்’ (156)

"சிந்தக்கடும்பகல் வேட்டையிற் காதலித் தடித்த
                         உடம்பொடு சிலைகணை உடைத்தோல் செருப்புத்
                         தொடர்ந்த நாயொடு தோன்றினன் தோன்றலும்"   
“கண்ணப்பர் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னையும் ஆட்கொண்டருளி”
-திருவாசகத்தில் மாணிக்கவாசகரின் வாக்குமூலம்.



"வன்கண் கானவன் மென்சொல் மடமகள்
         புன்புல மயக்கத்து உழுத ஏஅனல்
         பைம்புறச் சிறுகிளி கடியும் நாட
         பெரிய கூறி நீப்பினும்
         பொய்வலைப் படூஉம் பெண்டுதவப் பலவே"
                                      -இயல், ஐங்குறு நூறு 



[edit] வேட்டுவர்களின் வில்லாற்றல்:வேட்டுவர்கள் வில்லாற்றலில் சிறந்து விளங்கினர். அதற்கு கண சமூகத்தலைவர்களில் ஒருவனான வல்வில் ஓரியின் வில்லாற்றலே சிறந்த சான்றாகும். ஓரி என்பவன் கொல்லி மலைத்தலைவன், அவன் தன் வில்லாற்றல் காரணமாகப் புலவர்களால் வல்வில் ஓரி என்று சிறப்பிக்கப்பட்டான். அவனது வில்லாற்றலை வன் பரணர் புறப்பாடல் ஒன்றில் வியந்து போற்றுகிறார்.
"வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
       பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிதுறீஇப்
       புழற்றலைப் புகர்க்கலையுருட்டி யுரற்றலைக்
       கேழற்பன்றி வீழவயல
       தாழற்புற்றத் துடும்பிற் செற்றும்
       வல்வில் வேட்டம் வலம் படுத்திருந்தோன்
       புகழ் சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும்
       கொலைவன்"
                                   - புறநானூறு: 152
( யானையைக் கொன்று வீழ்த்த சிறந்த தொடையையுடைய அம்பு, பெரியவாயை யுடைய புலியை இறந்து படச் செய்து, துளை பொருந்திய கொம்பையுடைய தலையினையுடைய புள்ளிமான் கலையை உருட்டி, உரல் போலும் தலையையுடைய கேழலாகிய பன்றியை வீழச்செய்து அதற்கு அயலதாகிய ஆழ்தலையுடைய புற்றின் கட் கிடக்கும் உடும்பின் கண் சென்று செறியும் வல்வில்லால் உண்டாகிய வேட்டத்தை வென்றிப் படுத்தியிருப்பவன்: புகழமைந்த சிறப்பினையுடைய அம்பைச் செலுத்தும் தொழிலில் மிகச்சென்று உறுதற்குக் காரணமாகிய கொலைவன் ) என்று ஓரியின் வில்லாற்றல் வியந்து போற்றப்படுகிறது.


[edit] வேட்டுவச்சிறாரின் விற்பயிற்சி:வேட்டுவச் சிறுவர் விளையாட்டுப் பருவத்திலேயே விற்பயிற்சியைத் தொடங்கிவிடுவர், வளார்களில் மரற்கயிற்றைப் பிணித்து வில்லாகச் செய்வர். உடை வேலமரத்தின் உள்ளே புழையுடைய வெள்ளிய முள்ளை ஊகம் புல்லின் நுண்ணிய கோலிற் செருகி அம்புகளாகச் செய்வர். அவ்வம்புகளை வில்லில் தொடுத்து எய்து விளையாடுவர். இது குறித்துப் புறநானூறு அழகாகப்பேசுகிறது.
‘உழுதூர் காளை யாழ்கோடன்ன
      கவை முட்கள்ளிப் பொரியரைப் பொருந்திப்
      புது வரகரிகாற் கருப்பை பார்க்கும்
      புன்றலைச் சிறாஅர் வில்லெடுத்தார்ப் பிற்
      செங்கட் குறுமுயல் கருங்கலனுடைய
      மன்றிற் பாயும் வன்புலம்” 
                              - புறநானூறு : 322
(வன்புலமாகிய முல்லை நிலத்தில் வாழும் வில்லேருழவரான வேட்டுவர்களின் சிறுவர்கள் வரகுக் கொல்லைகளில் வரகினது அரிகாலைப் பொருந்தியிருக்கும் காட்டெலிகளை வேட்டமாடுவர். எலியொன்றைக் கண்டதும் அவர்கள் ஆரவாரம் செய்வர். அவ்வோசையைக் கேட்டு, அருகேமேயும் முயல்கள் அண்மையில் உள்ள அவர்களது குடிசையின் முற்றத்தில் இருக்கும் மட்கலங்களின் இடையே துள்ளிப் பாய்ந்து செல்லும். அதனால் மட்கலங்கள் உருண்டு உடைந்து கெடும்.) என்று அக்காட்சியைப் புறநானூற்றில் ஆவூர்கிழார் அழகுறக் காட்டுகிறார்.





‘வெருக்கு விடையன்ன வெருணோக்குக் கயந்தலை
     புள்ளன்தின்ற புலவுநாறு கயவாய்
     வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
     சிறியிலை உடையின் சுரையுடைவான் முள்
     ஊக நுண் கோற் செறிந்த அம்பின்
     வலாஅர் வல்விற் குலாவரக் கோலிப்
     பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
     புன்புலந்தழீஇய அங்குடிச்சீறூர்” 
                            
                             - புறநானூறு: 324
(வேட்டுவர்கள் காட்டுப் பூனையின் ஆணைப் போல் வெருண்ட பார்வையும் பெரிய தலையும் உடையவர்கள். பறவைகளின் ஊனைத் தின்பதால் புலால் நாற்றம் கமழும் மெல்லிய வெளுத்த வாயையுடையவர்கள். அவர்களின் பிள்ளைகள் ஒருவரையொருவர் விரும்பிநட்புக் கொண்டு உறையும் பண்பினை உடையவர்கள். அச்சிறுவர்கள் சிறிய இலைகளையுடைய ஊகம் புல்லில் செருகிய அம்பை வளாரால் செய்யப்பட்ட வில்லில் வைத்து வளைத்துப் பருத்தியாகிய வேலியடியில் உறையும் காட்டெலிகளை வீழ்த்துவதற்குக் குறி பார்த்து எய்து விளையாடுவர். இத்தகைய புன்செய் சூழ்ந்துள்ள அழகிய குடிகள் வாழும் சீறூர்) என்று ஆலத்தூர் கிழார் அமைவுறக் கூறுகிறார்.
எயினர்களின் விற்பயிற்சியும் வில்லாற்றலும் உணவுக்காக விலங்குகளை வேட்டையாடுவதற்கே பயன்படுத்தப்பட்டன என்பதைச் சங்க இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன. மண்ணாசை மற்றும் அதிகார போதை காரணமாகப் போர்த் தொழிலில் ஈடுபட்டு சக மனிதர்களைக் கொல்லும் நிலையினை மனித சமூகம் இன்னும் எய்தவில்லை என்பதனை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


பன்றிகள் கிளறிக்கிளைத்த புழுதியில் கானவர் தினை விதைத்தமை:      ‘அருவியார்க்கும் கழைபயில் நனந்தலைக்
      கறிவளரடுக்கத்து மலர்ந்த காந்தட்
      கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையோடு
      கடுங்கட் கேழல் உழுத பூழி
      நன்னாள் வருபத நோக்கிக் குறவர்
      உழா அது வித்திய பரூஉக் குரற் சிறுதினை
      முந்து விளை யாணர்” 
                              - புறநானூறு : 168



"கிழங்ககழ் கேழல் உழுத சிலம்பிற்
      றலை விளை கானவர் கொய்தனர்” - ஐங்குறுநூறு : ௨௭௦



"கேழல் உழுத கரிபுனக் கொல்லை" 
                             - ஐந்தினை எழுபது : 11



[edit] பன்னிரண்டு திருமுறைகள்-தேவாரம், திருவாசகம், திருமந்திரம் "வேடுவர் சிறப்பு""மூன்று கொலாம் கணை கையது வில் நாண்
மூன்று கொலாம் புர மெய் தன தாமே
- பாடியவர்: திருஞானசம்பந்தர் 
"வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்தம்
வல்லை வட்டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன் தில்லை வட்டந்திசை கைதொழுவார் வினை ஒல்லை வட்டங் கடந்தோடுதல் உண்மையே"
- பாடியவர்: திருநாவுக்கரசர் தலம் : தில்லை சிதம்பரம்

"கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
விரவலாமை சொல்லித் திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டு ஆறலைக்குமிடம் முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன் பூண்டி மாநகர்வாய் இடுகு நுண்ணிடை மங்கை தன்னோடும் எத்துக்கிங் கிருந்தீர் எம்பிரானீரே வில்லைக் காட்டிவெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லிக் கல்லினால் எறிந்திட்டும் மோதியுங் கூறை கொள்ளுமிடம் முல்லைத்தாது மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய் எல்லைக் காப்பதொன் றில்லையாகில் நீர் எத்துக்கிங் கிருந்தீர் எம்பிரானீரே பசுக்களே கொன்று தின்று பாவிகள் பாவம் ஒன்றறியார் உசிர்க் கொலை பல நேர்ந் துநாள்தொறும் கூறை கொள்ளுமிடம் முசுக்கள் போற்பல வேடர் வாழ் முருகன் பூண்டி மாநகர் வாய் இசுக்கழியப் பயிக்கங் கொண்டு நீர் எத்துக்கிங் கிருந்தீர் எம்பிரானீரே"
- பாடியவர்: சுந்தரர் தலம்: திருமுருகன் பூண்டி
             (காணாமல் போன நபர்கள், பொருட்கள் கிடைக்க ஓத வேண்டிய பதிகம்)



"கானவர்
     கரிபுனம் மயக்கிய அகன்காட் கொல்லை
     ஐவனம் வித்தி மையுறக் கவினி
     ஈனல் செல்லா ஏனற்கிழுமெனக்
     கருவி வானம் தலை இ"
(வேட்டுவர் சுடப்பட்டுக் கரிந்த புனத்தை மயங்க உழுத அகன்ற இடத்தையுடைய கொல்லைகக்கண் ஐவன நெல்லோடு வித்தி இருட்சியுற அழகு பெற்றுக் கோடை மிகுதியில் ஈன்றலைப் பொருந்தாத தினைக்கு இழு மென்னும் ஓசையுடன் மின்னலும் இடியும் முதலாகிய தொகுதியுடைய மழைத்துளி சொரிந்தது )என்று புற நானூறு கூறுகிறது.
- புற நானூறு (159)





"தேனினர் கிழங்கினர் ஊனார் வட்டியர்" 
             
                               - மலைபடுகடாம்



"வயமான் அடித்தேர்வான் போல" 
                               - கலித்தொகை குறிஞ்சிக் கலி





வேட்டுவர்களின் கவண் எறியும் கை வண்ணம்:    இடி உமிழ்பு இரங்கிய விரைபெயல் நடுநாள்
   கொடி விடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்து
   பிடியொடுமேயும் புன்செய்யானை
   அடியொதுங்கு இயக்கம் கேட்ட கானவன்
   நெடுவரை ஆசினிப் பணவை ஏறிக்
   கடு விசைக் கவணையில் கல் கை விடுதலின்
   இறுவரை வேங்கை ஓள் வீசிதறி
   ஆசினி மென்பழம் அளிந்தவை உதிரா
   தேன் செய்இறா அல் துளைபடப் போகி
   நறுவடி மாவின் பைந்துணர் உழக்கி
   குலையுடைவாழைக் கொழுமடல் கிழியா
   பலவின் பழத்துள் தங்கும்” 
                            - கலித் தொகைப் (குறிஞ்சிக்கலி 5 )





வேட்டுவர்களின் பறவை வேட்டை:  "மானதட் பெய்த உணங்குதினை வல்சி
  கானக் கோழியோடிதல் கவர்ந்ததுண்டென
  ஆரநெருப்பினாரல் நாறத்
  தடிவாந் திட்ட முழு வள்ளாரம்
  இரும்பே ரொக்கலொ டொருங்கினிதருந்தித்
  தங்கினை சென்மோ பாண" 
                           - புறநானூறு 320

"படலை முன்றிற் சிறு தினை யுணங்கல்
 புறவு மிதலு மறவு முண்கெனப்
 பெய்தற் கெல்லின்று பொழுதே" 
                          - புறநானூறு : 319




எயினரது ஊரும் அரணும்: "ஊர், அருமிளை இருக்கையதுவே”
- புறநானூறு :326
(ஊர், கடத்தற்கரிய காவற்காடு சூழ்ந்த இடத்தின்கண் உள்ளது)



"வாழ்முள்வேலிச் சூழ்மிளைப் படப்பை”
                        - பெரும்பாணாற்றுப்படை : 126
(ஊர், முள்ளையுடைத்தாகிய வாழ்முள் வேலியினையும் அதனைச் சூழ்ந்த காவற் காட்டினையுடைத்தாகிய பக்கத்தையும் உடையது)


"அருங்குழு மிளை" 
                        - மதுரைக் காஞ்சி 64  
(பகைவர் சேர்தற்கரிய திரட்சியையுடைய காவற்காடு) என்னும் தொடர்கள் குறிஞ்சி நிலத்து வேட்டுவரது ஊர்களைச் சார்ந்து அமைந்திருந்த காவற்காடுகள் பற்றியும் அவற்றின் தன்மை பயன் ஆகியன குறித்தும் கூறுகின்றன.
"மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையதரண்"
                         - (குறள்)

"பருந்துபட
  ஒன்னாத்தெவ்வர் நடுங்க வோச்சி
  வைநுதி மழுங்கிய புலவுவாயெ‡கம்
  வடிமணி பலகை யொடுநிரைஇ முடிநாண்
  சாபஞ்சார்த்திய கணைதுஞ்சு வியனகர்
  ஊகம் வேய்ந்த உயர்நிலை வரைப் பின்
  வரைத் தேன்புரையுங்கவைக்கடைப்புதையொடு
  கடுந்துடி தூங்கும் கணைக் காற்பந்தர்
  தொடர் நாயாத்த துன்னருங்கடிநகர்
  வாழ்முள்வேலி சூழ்மிளைப் படப்பை
  கொடுநுகந்தழீஇய புதவிற் செந்நிலை
  நெடுநுதி வயக்கழு நிரைத்த வாயிற்
  கொடுவில்லெயினர் குறும்பு"
                   - பெரும்பாணாற்றுப்படை(117-129)





"பூவற்படுவில் கூவற்றொடீஇய
  செங்கட் சின்னீர்"
                   - புறநானூறு 319
(செம்மண் நிலத்து மடுவில் உள்ள நீர் நிலையைத் தோண்டியதால் உண்டாகிய சிவந்த இடத்தில் சிறிதாக ஊறிய நீர்) என்றும்


"களிறு நீறாடிய விடுநில மருங்கில்
 வம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்திறந்தெனக்
 குழிக்கொள்சின்னீர் குராஅ லுண்டலிற்
 சேறு கிளைத்திட்ட கலுழ்கண்ணூறல்"
                   - புறம்: 325
(பன்றிகளால் புழுதியாக்கப்பட்ட விடுநிலத்தின் கண் புதிதாக வந்த பெருமழை அவ்விடத்தை வரைந்து பெய்து நீங்கிற்றாக பள்ளங்களில் தங்கிய சிறிதாக ஊறிய நீரைக் கன்றையுடைய பசுவானது அங்கே முளைத்திருந்த புல்லை மேய்ந்து உண்டொழிதலால் சேற்றைநீக்கித் தோண்ட ஊறிய கலங்கலாகிய நீர்) என்றும்,
"களிறு பொரக் கலங்கிய கழன்முள் வேலி
   அரிதுண்கூவலங் குடிச் சீறூர்"
                  - புறநானூறு: 306
(களிறு படிந்துழக்கக்கலங்கிச் சேறாகும் உண்ணும் நீர் அரிதாகிய நீர் நிலையும் முள்ளையுடைய கழற்கொடியாலாகிய வேலியும் சூழ்ந்த அழகிய குடிகளையுடைய சீறூர்) என்றும் புறநானூறு, முல்லை நிலத்து வல்லுவர்க்கூவல் பற்றிப்பேசுகிறது.



வேட்டுவ குலங்களின் (கூட்டங்கள்) பெயர் வகைகள்

வேட்டுவர் மலர் ஜூன் 2010 இதழிருந்து
கொங்கு வீர பெருங்குடியினரான வேட்டுவரிடையே (கவுண்டர்) பல குளங்கள் (கூட்டப் பிரிவுகள்) ஏற்பட்டன. இவை எதனை என்பதை நாம் அறுதியிட்டு உறுதியாகக் கூற இயலாது. இருபினும், ஆயிரம் குலப் பிரிவுகள் இருந்ததாக அறியப்படுகிறது . எனவே தான் வேர் வகையை எண்ணினாலும் வேட்டுவர் வகையை என்ன முடியாது எனும் முதுமொழியும் ஏற்படுள்ளது. நடுகற்கள், கல்வெட்டுகள், செப்பெடுகள், ஓலைசுவடிகள், பஞ்சவர்ண ராஜகாவியம், இலக்கியம், சோழர் பூர்வ பட்டயம் ஆகியவை மூலம் அறியப்படுகின்ற சுமார் 363 குலங்களின் பெயர்கள் மட்டும் காண்போம். வேட்டுவர்கள் குலபிரிவுகள் அடிப்படையிலும் பல பகுதியாக பிரிந்து வாழ்தனர். சிலர் தாம் எந்த ஊரிலிருந்துகுடி பெயர்ந்தனரோ அந்த மன்னனின் (ஊரின்) பெயரைத் தமது குலத்திற்கு (கூட்டம்) வைத்துக் கொண்டனர். பலர், கொடை வீரம், மாண்பு, விலங்குகள், பறவைகள், மரம், செடி, கோடி, சங்க கால தலைவர்கள், பெண்பாற் புலவர்கள் ஆகியவற்றியையும் தமது குலபிரிவுகளாக கொண்டனர். இதன் காரணமாகவே, இக் கூட்டப் பெயர்கள் ஏற்பட்டுள்ளது. கொங்கு வேட்டுவரிடையே குல பட்டியலை கீழே காண்போம். வரலாற்று செம்மல் பேராசிரியர் இராசசேகரத்தங்கமணி அவருடைய “கொங்கு சமுதாயம் வேட்டுவர்” என்னும் நூலின் மூலம் வேட்டுவர் சமுதாயக் குலங்களை அதன் பெருமைகளுடன் தொகுத்து கூறும் இந்த “வேட்டுவர் கலிபெண்பா” கலூர் பரணன் அவைகள் மூலம் அறியப்பட்டது.
Kulam அந்தி வேட்டுவர் அந்துவ வேட்டுவர் அரிச்சந்திர வேட்டுவர் அமுத வேட்டுவர் அகத்திய வேட்டுவர் அம்பிகாபதி வேட்டுவர் அண்டவாணி வேட்டுவர் அக்னி வேட்டுவர் அல்லாள வேட்டுவர்
அன்னல் மீள வேட்டுவர் 
அமர வேட்டுவர் அகோர வேட்டுவர் அங்கி வேட்டுவர்
அச்சுத வேட்டுவர் 
அதிமுக வேட்டுவர் அம்பா வேட்டுவர் அறி வேட்டுவர் அருணை வேட்டுவர்
அவுதன வேட்டுவர் 
அனாதி வேட்டுவர் அன்னை வேட்டுவர் அண்ட வேட்டுவர் ஆலிலை வேட்டுவர் ஆனைமலை வேட்டுவர் அமரவதி வேட்டுவர் ஆமை வேட்டுவர் ஆப்ப வேட்டுவர் ஆவணி வேட்டுவர் ஆறுமுக வேட்டுவர்
ஆவை வேட்டுவர் 
ஆனந்த வேட்டுவர் இந்திர வேட்டுவர் இலங்க வேட்டுவர் (இரும்புலி) வேட்டுவர் இரண வேட்டுவர் இராச கெம்பீர வேட்டுவர் இரும்புரை வேட்டுவர் ஈங்கூர் வேட்டுவர் ஈஞ்சம்பள்ளி வேட்டுவர்
ஈசன் வேட்டுவர்  
உண்ணாடி வேட்டுவர் உதிர வேட்டுவர் உடும்பை வேட்டுவர்
உக்கிர வேட்டுவர் 
உத்தம வேட்டுவர்
உத்திர வேட்டுவர் 
உமைய வேட்டுவர்
உயர்குடி வேட்டுவர் 
உரிமைபடை வேட்டுவர் உரிமை வேட்டுவர்
உயர வேட்டுவர் 
உம்டி வேட்டுவர் உருமுக வேட்டுவர்
உளிய வேட்டுவர் 
உரும வேட்டுவர் ஊராளி வேட்டுவர் ஊதியூர் வேட்டுவர் எரிமுக வேட்டுவர் ஓரி வேட்டுவர் ஜெய வேட்டுவர் ஜெயவெந்த வேட்டுவர் கடம்ப வேட்டுவர்
கட்டாரி வேட்டுவர் 
கட்டி வேட்டுவர் கட்டை வேட்டுவர் கணபதி வேட்டுவர் கட்சி வேட்டுவர் கண்ண வேட்டுவர் கமலாலய வேட்டுவர் கரடி வேட்டுவர்
கரிப்படை வேட்டுவர்
கரிய வேட்டுவர் 
கருங்காலி வேட்டுவர் கருணை வேட்டுவர் கடும்பிளி வேட்டுவர்
கரும் பூளை வேட்டுவர்
கருங்கண்ண வேட்டுவர் 
கரைய வேட்டுவர் கவுதாரி வேட்டுவர் கள்ளை வேட்டுவர் கற்பூர வேட்டுவர் கற்ப வேட்டுவர் கடம்புலி வேட்டுவர் கரும்பாரி வேட்டுவர் கதிப்ப வேட்டுவர் கதிரிகளனை வேட்டுவர் கதிர் வேட்டுவர் கதுகாலி வேட்டுவர் கரட்டு வேட்டுவர் கரும்புனித வேட்டுவர் கருவண்ட வேட்டுவர் கவண்டி வேட்டுவர் களஞ்சி வேட்டுவர் களங்க வேட்டுவர் கடியநெடு வேட்டுவர் கன்னி வேட்டுவர் காமக்கண்ணி வேட்டுவர் காங்கய வேட்டுவர் காஞ்சி வேட்டுவர் காடை வேட்டுவர் காடு வேட்டுவர் காரை வேட்டுவர் காவலர் வேட்டுவர் காளத்தி வேட்டுவர் காந்தி வேட்டுவர் காரி வேட்டுவர் காச வேட்டுவர் காக்கா வேட்டுவர் கிழங்கு வேட்டுவர் கீதை வேட்டுவர் கீரந்தை வேட்டுவர் கீழ்சாத்தை வேட்டுவர் கீழ்முக வேட்டுவர் குடுமி வேட்டுவர் குரும்பில்லர் வேட்டுவர் குடதிசை வேட்டுவர் குன்னாடி வேட்டுவர் குபேர வேட்டுவர் குமரர் வேட்டுவர் குக்க வேட்டுவர் கும்பமுனி வேட்டுவர் குருகுல வேட்டுவர் குருமுனி வேட்டுவர் குயில் வேட்டுவர் குறும்ப வேட்டுவர் குன்ன வேட்டுவர் குறுண்டி வேட்டுவர் கூச்சந்தை வேட்டுவர் கூத்தாடி வேட்டுவர் கூரம்ப வேட்டுவர் கூகை வேட்டுவர் கொடுமுடி வேட்டுவர் கொடும்புளி வேட்டுவர் கொடும்பரி வேட்டுவர் கொச்சி வேட்டுவர் கொம்மடி வேட்டுவர் கொல்லி வேட்டுவர் கொன்னை வேட்டுவர் கொட்டபுளி வேட்டுவர் கொடும்ப வேட்டுவர் கொன்றை வேட்டுவர் கொங்கணாவேட்டுவர் கொடையூர் வேட்டுவர் கொடும்பூர் வேட்டுவர் கொழக்கதாளி வேட்டுவர் கொடை வேட்டுவர் கொள்ளுகழி வேட்டுவர் கோதண்ட வேட்டுவர் கோபாலர் வேட்டுவர் கோமாரி வேட்டுவர் கோமாளி வேட்டுவர் கோமுகி வேட்டுவர் சத்திய வேட்டுவர் சமய வேட்டுவர் சம்மந்த வேட்டுவர் சங்கு வேட்டுவர் சர்க்கரை வேட்டுவர் சரக்கு வேட்டுவர் சதிப்பு வேட்டுவர் சதுமுகை வேட்டுவர் சலங்கை வேட்டுவர் சாக்கை வேட்டுவர் சாம்பவி வேட்டுவர் சாலியன் வேட்டுவர் சாக்களி வேட்டுவர் சாந்தபடை வேட்டுவர் சாதி வேட்டுவர் சித்த வேட்டுவர் சித்திரை வேட்டுவர் சிலை வேட்டுவர் சிறுத்தலை வேட்டுவர் சிறுத்தை வேட்டுவர் சிவக்காடை வேட்டுவர் சிலம்பன் வேட்டுவர் சுண்ட வேட்டுவர் சுரண்டை வேட்டுவர் சுள்ளி வேட்டுவர் சுறன் வேட்டுவர் சுக்கிர வேட்டுவர் சுந்தர வேட்டுவர் சுப்ரமணிய வேட்டுவர் செம்பூளை வேட்டுவர் செம்ப வேட்டுவர் செங்கண் வேட்டுவர் சொட்டை வேட்டுவர் சொர்ண வேட்டுவர் சேர வேட்டுவர் சேதாரி வேட்டுவர் சோணாசல வேட்டுவர் சோள வேட்டுவர் சோலை வேட்டுவர் தழம்பு வேட்டுவர் தாவணர் வேட்டுவர் தகடூர் வேட்டுவர் தனஞ்செய வேட்டுவர் தன்மான வேட்டுவர் தலையூர் வேட்டுவர் தன்னம்பர் வேட்டுவர் தளபதி வேட்டுவர் திட்ட வேட்டுவர் திடுமால் வேட்டுவர் திங்கள் வேட்டுவர் திண்ணன் வேட்டுவர் தினை வேட்டுவர் துத்தி வேட்டுவர் துக்காச்சி வேட்டுவர் தும்பை வேட்டுவர் துர்க்கை வட்டுவர் தூண்டி வேட்டுவர் துரை வேட்டுவர் தூவை வேட்டுவர் தூங்க வேட்டுவர் தென்முக வேட்டுவர் தென்னிலை வேட்டுவர் தேரை வேட்டுவர் தேவேந்திர வேட்டுவர் தொய்யல் வேட்டுவர் தொரட்டி வேட்டுவர் தொக்க வேட்டுவர் தோராத வேட்டுவர் நச்சுழி வேட்டுவர் நம்ப வேட்டுவர் நறிய வேட்டுவர் நவ வேட்டுவர் நக்கல் வேட்டுவர் நஞ்சை வேட்டுவர் நங்க வேட்டுவர் நரம்பு வேட்டுவர் நட்சத்திர வேட்டுவர் நல்வாலை வேட்டுவர் நாதன் வேட்டுவர் நட்டுவ வேட்டுவர் நாரை வேட்டுவர் நான்முகு வேட்டுவர் நாரண வேட்டுவர் நுளம்ப வேட்டுவர் நூதர வேட்டுவர் நாளுபுவி வேட்டுவர் பகவதி வேட்டுவர் படைதலை வேட்டுவர் பட்டாளி வேட்டுவர் பண்ணை வேட்டுவர் பங்கய வேட்டுவர் பாரத வேட்டுவர் பத்திர வேட்டுவர் பரட்டை வேட்டுவர் பரம வேட்டுவர் பரிப்படை வேட்டுவர் பரிமள வேட்டுவர் பலகை வேட்டுவர் பள்ள வேட்டுவர் பறைய வேட்டுவர் பற்ப வேட்டுவர் பற்ப வேட்டுவர் பணய வேட்டுவர் பன்னாடை வேட்டுவர் பசப்பி வேட்டுவர் பண்ண வேட்டுவர் பானு வேட்டுவர் பாதரை வேட்டுவர் பாண்டிய வேட்டுவர் பறவை வேட்டுவர் பிரம்ம வேட்டுவர் பாத வேட்டுவர் பிரமியம் வேட்டுவர் புண்ணடி வேட்டுவர் புலிமுக வேட்டுவர் புளிய வேட்டுவர் புல்லை வேட்டுவர் (பிள்ளை ) புன்னாடி வேட்டுவர் புட்ப வேட்டுவர் புன்னந்தை வேட்டுவர் புன்னை வேட்டுவர் புவி வேட்டுவர் பூமாரி வேட்டுவர் பூலுவ வேட்டுவர் பூவாணி வேட்டுவர் பூச்சந்தை வேட்டுவர் பூழை வேட்டுவர் நொய்யல் வேட்டுவர் பெரியவகை வேட்டுவர் பெருமாள் வேட்டுவர் பெயர வேட்டுவர் பெருந்தலை வேட்டுவர் பெரீஞ்சை வேட்டுவர் பொண்ண வேட்டுவர் பொன்னை வேட்டுவர் வராக வேட்டுவர் வடுக வேட்டுவர் வன்னி வேட்டுவர் வஞ்சி வேட்டுவர் வடமலை வேட்டுவர் வள்ளி வேட்டுவர் வாகை வேட்டுவர் வாக வேட்டுவர் விக்கிரம வேட்டுவர் விதரி வேட்டுவர் வில்லி வேட்டுவர் வில்வ வேட்டுவர் விளக்கு வேட்டுவர் விளிய வேட்டுவர் வீரசங்காலி வேட்டுவர் வீரன் வேட்டுவர் வீராந்தை வேட்டுவர் வீரிய வேட்டுவர் வீணை வேட்டுவர் விசயமங்கல வேட்டுவர் விறகு வேட்டுவர் வினைய வேட்டுவர் விருபாச்சி வேட்டுவர் விந்தை வேட்டுவர் வெங்கச்சி வேட்டுவர் வெங்காஞ்சி வேட்டுவர் வெள்ளை வேட்டுவர் வெற்ப வேட்டுவர் வேந்த வேட்டுவர் வெலையன் வேட்டுவர் வேங்கை வேட்டுவர் வேதாரி வேட்டுவர் வேதகிரி வேட்டுவர் வேண்ட வேட்டுவர் வெம்ப வேட்டுவர் வேல் வேட்டுவர் ராயர் வேட்டுவர் பாத்திரம் வேட்டுவர் மானிய வேட்டுவர் மலாயா வேட்டுவர் மயில் வேட்டுவர் மகாமுனி வேட்டுவர் மன்னன் வேட்டுவர் மன்றி வேட்டுவர் மலையாண்டி வேட்டுவர் மாடந்தை வேட்டுவர் மாச்சடி வேட்டுவர் மாந்தபடை வேட்டுவர் மான வேட்டுவர் மாகாளி வேட்டுவர் மகாவீரன் வேட்டுவர் மாவளவன் வேட்டுவர் மாந்த வேட்டுவர் மின்ன வேட்டுவர் மினுக வேட்டுவர் மீள வேட்டுவர் மீன் வேட்டுவர் முரட்டு வேட்டுவர் முகிழ வேட்டுவர் மும்முடி வேட்டுவர் முழக்க வேட்டுவர் முளைப்பாரி வேட்டுவர் முன்னை வேட்டுவர் முதட்டை வேட்டுவர் முடகாளி வேட்டுவர் முடக்கடி வேட்டுவர் முறட்டை வேட்டுவர் மூத்த வேட்டுவர் மூளை வேட்டுவர் மூல வேட்டுவர் மொயர வேட்டுவ

வரலாற்றில் உண்மையாகவே தலையூர் காளி தற்கொலை செய்து கொல்கிறார ?

வரலாற்றில் உண்மையாகவே தலையூர் காளி தற்கொலை செய்து கொல்கிறார ?


அன்பு உறவினர்களுக்கு வணக்கம்.
பொன்னர் சங்கர் திரைப்படத்தில் நமது சமூகத்தை பற்றி இழிவாக எடுக்கப்பட்டிருக்கிறது என்று செய்திகள்
பலவாறாக வந்த வண்ணம் இருந்தது. பல எதிர்ப்புகளுக்கு இடையே படமும் வெளிவந்து ஓடிக் கொண்டுள்ளது.


இந்த படத்தில் அப்படி எதுவும் இல்லை.தலையூர் காளி மன்னன் மட்டும் போர் களத்தில் தற்கொலை செய்து
கொண்டு இறப்பதாக காட்சி எடுக்கப்பட்டு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அதாவது தலையூர் காளியை செல்லாத்தா கவுண்டர், மாந்தியப்பன் ஆகியோரின் தவறான வழிகாட்டுதலின் பேரில் சின்ன மலைகொழுந்தான் குடும்பத்தை கடத்துவது. அருக்காணியை கடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு
தனது பெயரை கெடுத்து கொள்கிறார்.பெரிய மலைக்கொழுந்தன்.செல்லாத்தா கவுண்டர்,மாந்தியப்பன்
தூண்டுதலின் பேரில்தான் தலையூர்காளி வளநாட்டின் மீது படை எடுக்கிறார்.

இவர்கள் சூழ்ச்சி யை போரின்கடைசி நிமிடத்தில் அறிகிறார்.பொன்னரிடம் போரில் சண்டையிட்டு தான் நிராயுதபாணியாக நிற்கும் போது இதற்கெல்லாம் காரணம் மாந்தியப்பன்,செல்லாத்தகவுண்டர் என்பதை உணர்ந்து போரில் தனக்கு பொன்னர் உயிர் பிச்சை அளித்ததை ஏற்காமல் இனிமேல் நான் வாழ மாட்டேன் என்று வாளால் தற்கொலை செய்துகொள்கிறார்.மானம் பெரிது என்று உணர்த்தப்படுகிறது.
இந்த படத்திற்கும் வரலாற்றுக்கும் சிறிதும் பொருத்தம் இல்லாமல் படம் எடுக்கப்பட்டுள்ளது.
பிச்சன் எழுதிய கதை வேறு.முதல்வர் கலைஞர் தன் நூலில் எழுதிய பொன்னர் சங்கர் கதை வேறுவிதமாக உள்ளது.திரைப்படமாக எடுக்கும் போது அதையே வேறுவிதமாக மாற்றி எழுதியுள்ளார்.
இது ஒரு கற்பனையாக திரைப்படத்திற்க்காக எழுதப்பட்ட கதை.  வேறு எந்த இடத்திலும் நமது சமூகத்தை
பற்றி இழிவாக எழுதப்படவில்லை.நிறைய செலவு செய்து பிரமாண்டமாக படம் எடுத்திருந்தாலும் இந்தப்படம் ஓடாது.

ஆர்.முத்துசாமி.( 9940701039)
ஒருங்கிணைந்த வேட்டுவக்கவுண்டர் பொது நலச் சங்கம்.

அன்பு உறவினர்களுக்கு

அன்பு உறவினர்களுக்கு
வணக்கம். நம் சமூகத்தை இகழ்ந்து எழுதிய சக்திகனலுக்கு நீக்களும் கடிதம் எழுதலாம்.நீங்க எழுதிரதை வைச்சு
ஏன்டா பேப்பருக்கு பேட்டி கொடுத்தோம் என்று நினைக்கவேண்டும் அந்த அளவுக்கு கடிதம் எழுதுங்க உதாரணத்திற்கு திரு.கோபால் கவுண்டர் கடிதத்தை படிக்கவும்.

சக்தி கனல் முகவரி
திரு.சக்திகனல்பழனிச்சாமி
வெற்றிவேல் இல்லம்,
5. வ.உ.சி. தென்வடல்மெயின்ரோடு,
தில்லைநகர்,
கோவை - 641026

குறைந்த பட்சம் ஒரு 500 கடிதமாவது போக வேண்டும்.

ஆர்.முத்துசாமி
புஞ்சைபுளியம்பட்டி

கானவரின் விலங்கு வேட்டை



கானவரின் விலங்கு வேட்டை
வெ.பெருமாள் சாமி


உடும்பு
எயினர் வேட்டையாடிக் கொன்ற விலங்குகளில் உடும்பும் ஒன்றாகும். உடும்புகளை எயினர் விரும்பி வேட்டையாடினர். உடும்பின்தசை சத்துமிக்கது என்று மக்கள் கருதுகின்றனர். அதன் தசை, உண்பாரது உடலில் முழுமையாகச் சேரும் என்பது மக்களின் நீண்டகால நம்பிக்கை ஆகும். இதுபற்றி ‘கால் கோழி, அரை ஆடு, முக்கால் காடை, முழுஉடும்பு” என்று ஒரு சொலவம்மக்களிடையே வழங்கிவருகிறது. வேட்டைப்பிரியர்கள் இன்றும் உடும்புகளை விரும்பி வேட்டையாடுகின்றனர்.

ஊருக்கு அண்மையில் இருந்த மடுக்கரையில் இருந்து உடும்புகளை எயினச்சிறார் பிடித்து வந்த செய்தியைப் புறநானூறு முதலிய நூல்கள் கூறுகின்றன.

animalhunt ‘ஊர்,அருமிளையதுவே மனைவியும்
வேட்டைச்சிறாஅர் சேட்புலம் படராது
படுமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
விழுக்கு நிணம்பெய்த தயிர்க்கண் விதவை
யாணர்நல்லவை பாணரொடொராங்கு
வருவிருந்தயரும் விருப்பினள்”
- புறநானூறு 326

(கடத்தற்கரிய காவற்காடு சூழ்ந்த இடத்தின் கண் உள்ள ஊரில் மனைக் கிழத்தி, வேட்டுவச் சிறுவர்கள் நெடுந்தொலைவு செல்லாமல் மடுக்கரையில் பிடித்துக் கொண்டு வந்த குறுகிய காலையுடைய உடும்பினது விழுக்காகிய தசையைப் பெய்து சமைத்த தயிரோடு கூடிய கூழையும் புதிதாக வந்த வேறு நல்;ல உணவுகளையும் பாணருக்கும் அவரோடு வந்த ஏனை விருந்தினருக்கும் ஒரு சேரக் கொடுத்து உண்பிக்கும் இயல்பினள்) என்றும்

‘களர் வளரீந்தின் காழ் கண்டன்ன
சுவல் விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி
ஞமலிதந்த மனவுச் சூல் உடும்பின்
வரைகால்யாத்தது வயின் தொறும் பெறுகுவிர்”
பெரும்பாணாற்றுப்படை: 130-133

(களர்நிலத்தேவளர்ந்த ஈந்தினது விதைபோன்ற மேட்டுநிலத்தே விளைந்த நெல்லினது சிவந்த அவிழாகிய சோற்றை, நாய்கடித்துக் கொண்டுவந்த அக்குமணிபோன்ற முட்டைகளையுடைய உடும்பினது பொரியலாலே மறைத்ததனை மனை தோறும் பெறுகுவீர்) என்றும் எயினப் பெண்கள் தம் குடிசைக்கு வந்த விருந்தினராகிய பாணர் முதலியவர்களுக்கு உடும்பின் தசையைச்சமைத்து விருப்புடன் வழங்கி உபசரித்த செய்தியைச் சங்க இலக்கியங்கள் சுவைபடக் கூறுகின்றன.

முயல் உடும்பைப் போலவே முயலும் ஒரு சிறிய விலங்குதான். மக்கள் இன்றும் அதனை விரும்பி வேட்டையாடுகின்றனர். பண்டை நாள் போலவே இன்றும் உணவுக்காகவே முயல் வேட்டையாடப்படுகிறது. முயல் ஒருசாதுவான ஆபத்தில்லாத விலங்கு. அதை வேட்டையாடுவதும் எளிது. எனவே எயினர் முயலை மிகுதியாக வேட்டையாடினர். வேட்டுவர் குடிசைகளில் முயற்கறி முக்கிய உணவாக இருந்தது. அங்கு எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் முயற்கறி உண்ணக் கிடைத்தது. வேட்டுவர் முயல் வேட்டையாடியது குறித்துச் சங்க இலக்கியங்கள் விரிவாகவே பேசுகின்றன.

“படலை முன்றிற் சிறு தினையுணங்கல்
புறவுமிதலுமறவுமுண்கெனப்
பெய்தற் கெல்லின்று பொழுதேயதனால்
முயல் சுட்டவாயினும் தருவேம் புகுதந்
தீங்கிருந்தீமோ முதுவாய்ப்பாண” என்று புறநானூறு ( 319) கூறுகிறது.

எயினரது மனைக்குப் பாணனாகிய விருந்தினன் தன் சுற்றத்தாருடன் ஞாயிறு மறைந்த மாலைப் பொழுதில் வந்திருந்தான். அவனுக்கு உணவளித்துப் பசி போக்கி உபசரிக்க வேண்டிய கடப்பாடு தனக்கு உண்டு என்பதை உணர்ந்த மனைத் தலைவி பாணனிடம் கூறினாள். “பாணனே சிறிய தினையரிசியை முற்றத்தில் தெளித்து அதனை உண்ணவரும் புறா முதலிய பறவைகளைப் பிடித்துச்சமைத்து உங்களுக்கு வழங்குதவற்குக் கால மின்மையின் எம்மிடம் உள்ளது பழையதாகிய சுட்ட முயற்கறியே. அதனை உங்களுக்கு உண்ணத்தருவோம்.” என்று கூறி மனைத்தலைவி பாணரை உபசரித்து உணவூட்டிய செய்தியை ஆலங்குடி வங்கனார் மேற்குறித்த புறநானூற்றுப் பாடலில் கூறுகிறார்.

முயல் வேட்டைக்குச் சென்ற எயினர் தாம் வளர்த்த நாய்களையும் வேட்டைக்காக உடன்கொண்டு சென்றனர். ( இன்றும் முயல் வேட்டைக்குச் செல்வோர் நாய்களையும் உடன் கொண்டு செல்கின்றனர்) “நெடியசெவிகளையுடைய முயல்களை அவை ஓரிடத்தும் போக்கில்லாதபடிகுவிந்த இடத்தையுடைய வேலியிடத்தே வலைகளைப் பிணைத்து மாட்டிவளைத்துப் பசிய தூறுகளையடித்து முயல்களை அவற்றில் கிடவாமல் ஓட்டிக் கொன்றனர்” என்று கானவர் முயல் வேட்டையாடியமை குறித்து கடியலூர் உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையில் கூறுகிறார்;.

பன்றி வேட்டை
எயினர் உணவுக்காகப் பன்றி களையும் வேட்டையாடினர். பன்றி வேட்டை முயல் வேட்டைபோல எளிய செயல் அன்று, கடினமானது. வேட்டையின் போது, விரட்டி வரும் வேடர்களைப் பன்றிகள் தம் வளைந்த கொம்பால் மோதித்தாக்குவதும் உண்டு . அதனால் எயினர் பன்றிகளைக் கொல்வதற்குச் சில தந்திரமான செயல்களை மேற்கொண்டனர். (குறிஞ்சி நிலத்தில் பன்றிகளைக் குடிசைகளில் வளர்க்கும் பழக்கம் இன்னும் ஏற்பட்டிருக்கவில்லை : ஏனெனில், வேட்டைச் சமூகம் இன்னும் மேய்ச்சல் சமூகமாக மாறவில்லை) மழையின்றி வறட்சி பாதித்த கடுங்கோடைக் காலங்களில் விலங்குகள் நீருக்காக தாகத்தோடு மயங்கித்திரியும். அவ்வாறு நீர் தேடியலையும் விலங்குகளின் காலடித்தடங்கள் மிகுதியாக அழுந்திக் கிடக்கின்ற வழியிடங்களில் தறுகண்மையுடைய கானவர்கள், மழைபெய்தால் நீர் நிற்க வேண்டுமென்று கருதிக் குளங்கள் அமைத்தனர். அக்குளங்களின் அருகில் மட்டுக் குழி (பதுங்குழி) களையும் அமைத்தனர். இரவில் பன்றி முதலிய விலங்குகள் நீருண்ண அக்குளங்களுக்கு வரும். அப்படி வரும் காலங்களில் மறைந்திருந்து அவற்றைக் கொல்வதற்காக வேட்டுவர் அமைத்துக் கொண்ட அக்குழிகளே மட்டுக் குழிகள் எனப்பட்டன. விலங்குகள் நீருண்ண வருதலை எதிர்பார்த்து அக்குழிகளில் பதுங்கியிருந்த வேட்டுவர் அவை வந்ததும் அவற்றைப் பாய்ந்து கொன்றனர். இச் செய்தியைப் பெரும்பாணாற்றுப்படை தெளிவாகக் கூறுகிறது. இங்கு வேட்டுவர் அமைத்த இக்குளங்கள் தனிமனிதர்களுக்காக அமைக்கப்பட்டவை அன்று. சமூகத்தேவைக்காக சமூகத்தவர் அமைத்துக் கொண்ட குளமே அது.

‘மானடிபொறித்த மயங்கதர் மருங்கின்
வான் மடி பொழுதின் நீர் நசைக் குழித்த
அகழ்சூழ் பயம்பின் அகத்தொழித்தொடுங்கிப்
புகழாவாகைப் பூவினன்ன
வளை மருப்பேனம் வரவுபார்த்திருக்கும்
அரைநாள் வேட்ட மழுங்கிற்பகனாட்
பகுவாய்ஞமலியொடுபைம்புதலெருக்கித்
தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி
முள்ளரைத் தாமரைப் புல்லிதழ் புரையும்
நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கறவளைஇக்
கடுங்கட்கானவர் கடறு கூட்டுண்ணும்
அருஞ்சுரம்” என்று, எயினர் மட்டுக் குழிகள் அமைத்துப் பதுங்கியிருந்து பன்றி வேட்டையாடியது குறித்துச் சுவைபடக் கூறிய கடியலூர் உருத்திரங்கண்ணனார், முயல் வேட்டையாடியது குறித்தும் கூறியுள்ளார்.

தினைப்புனத்தில் தினைக் கதிர்கள் நன்கு விளைந்து முற்றிய காலங்களில் பன்றிகள் இரவுப் பொழுதில் வந்து அத்தினைக் கதிர்களை மேய்ந்து அழிக்கும், அதனைத் தடுப்பதற்காக வேட்டுவர் தினைப் புனங்களில் பன்றிகள் வரும் பாதையில் பெரியகற்பொறிகளை அமைத்து வைத்திருப்பார்கள். தினைப்புனத்தை மேய வரும் பன்றிகள் அக்கற்பொறிகளில் அகப்பட்டுக்கொள்ளும், அப்போது, தினைப்புனம் காத்திருந்த எயினர் விரைந்து வந்து அப்பன்றியைக் குத்திக் கொல்வர். இக்கற் பொறிகள் அடார் என்று வழங்கப்பட்டன.

“விளைபுன நிழத்தலிற் கேழலஞ்சிப்
புழை தொறும் மாட்டிய இருங்கலரும் பொறி
யுடைய ஆறே”

(வழிகள் முற்றிய தினைப்புனத்தைப் பன்றிகள் நொக்குகையினாலே இதற்கு அஞ்சிச் சில் வழிகள் தோறும் கொளுத்திவைத்த பெரிய கற்பொறிகளையுடையவை ) என்று, தினைப்புனங்காத்த எயினர், பன்றிகள் தினைக்கதிரை உண்ணவரும் பாதைகளில் கற்பொறிகளை அமைத்து வைத்த செய்தியை மலைபடுகடாம் ( 193-95 ) கூறுகிறது.

“தினையுண் கேழல் இரியப் புனவன்
சிறுபொறி மாட்டிய பெருங்கல் அடா அர்
ஒண்கேழ் வயப்புலிபடூ; உம்”

(தினைக் கதிரைத் தின்ன வரும் பன்றியை வீழ்த்துவதற்காக வேட்டுவன் மாட்டி வைத்த பெரிய கற்பொறியாகிய அடார் என்பதில் வலிமை மிக்க புலி அகப்பட்டுக் கொண்டது) என்று நற்றிணை ( 119 ) கூறுகிறது. வேட்டுவர் புலி வேட்டையின் பொருட்டும் அடார் என்னும் கற்பொறியினை அமைத்து வைத்த செய்தியைப் புறநானூறு கூறுகிறது” இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய பெருங்கலடார், என்பது புறநானூறு (19) அது குறித்துக் கூறும் செய்தியாகும்.

முள்ளம் பன்றி வேட்டை
வேடர்கள் விரும்பி வேட்டையாடும் விலங்குகளில் முள்ளம் பன்றியும் ஒன்று. முளவுமா என்றும் எய்ப்பன்றி என்றும் இலக்கியங்கள் இதனைக் குறிக்கின்றன. முள்ளம் பன்றியானது, தனக்கு ஆபத்து நேரிட்ட காலங்களில், தன் எதிரிகளின் மேல், தன் உடலைச் சிலிர்த்து உதறிக் கூரிய முள்போன்ற மயிரைச் செலுத்துமாம். அவ்வாறு செலுத்தப்பட்ட மயிராகிய முள் எதிரியின் உடம்பில் தைத்து அவற்றுக்கு மிகுந்த துன்பத்தைச் செய்யும், இவ்வாறு உடலைச் சிலிர்த்து எதிரிகளின் மேல் மயிரை எய்வதால் முள்ளம் பன்றி எய்ப்பன்றி எனப்பட்டது. முள்ளம் பன்றி வேட்டை, பன்றி வேட்டையை விட ஆபத்தானது. ஆனாலும் எயினர் அவற்றை விரும்பி வேட்டையாடினர். “முளவு மாத் தொலைச்சிய முழுச்சொலாடவர்” - ( புறநானூறு : 325 )

“முளவுத் தொலைச்சிய பை நிணப் பிளவை” என்று வேட்டுவர் முள்ளம் பன்றிகளை வேட்டையாடிய செய்தியைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. நெடிய மலையிடத்துக் குகையில் முள்ளம் பன்றி பதுங்கிக் கிடந்தது. அதனையறிந்த வேட்டுவன் அதனை வேட்டையாடுவதற்காக அங்குச் சென்றான். கானவனது வருகையை உணர்ந்து கொண்ட அவ்விலங்கு அவனிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கான தற்காப்பு முயற்சியில் ஈடுபட்டது. கூர்மையான ஊசி போன்ற தன்மயிராகிய முள்ளை, உடலைச் சிலிர்த்து உதறி ஏவியது. அம்முட்கள் கானவன் உடலில் தைத்துப் பெரும்புண் உண்டாக்கின. புண்பட்ட வேட்டுவன் வலிதாங்கமாட்டாமல் அழுது கூச்சலிட்டான். அக்கூச்சல் கானகமெங்கும் எதிரொலித்தது.

“சேயளைப் பள்ளியெ‡குறு முள்ளின்
எய்தெற விழுக்கிய கானவரழுகை” (நெடிய முழையாகிய இருப்பிடத்தில் தங்கும் எய்ப்பன்றி தனது கூர்மையுறுகின்ற முள்ளால் எய்து கொல்லுகையினாலே பட்ட கானவர் அழுகை) என்று, முள்ளம்பன்றியை வேட்டையாடப் புகுந்த கானவன் பட்ட பாட்டை மலைபடுகடாம் (300- 1) கூறுகிறது.

“அகன்றுறைச்சிலைப் பாற்பட்ட முளவு மான்கொழுங்குறை”

“அகன்ற நீர்த்துறைக்கண் வில்லால் வீழ்த்தப்பட்ட முள்ளம் பன்றியின் ஊன்”; என்று, முள்ளம் பன்றி ஊனுக்காக வேட்டையாடப்பட்டது குறித்துப் புறநானூறு ( 374) கூறுகிறது. இரவு நேரங்களில் பன்றி முதலிய விலங்குகள் வந்து தினைப்புனத்தை நொக்கி அழித்து விடாமல் இருக்கக் காவல் காத்த எயினர், பரண் அமைத்து அதன்மேல் இருந்து காத்தனர். இரவு நேரத்தில் யானைகள் வந்து தினைப்புனத்தை அழித்தலும் உண்டு. பரண்கள் உயரம் குறைவாக இருந்தால் யானைகள் பரண்களை அழித்து, பரண்மேல் இருப்போரைத் துன்புறுத்தக் கூடும். அதனால் யானைகளுக்கு எட்டாத உயரத்தில் மரங்களின் மேல் பரண் அமைத்து வேடர் அதன் மேல் இருந்து தினைப்புனம் காத்தனர். அப்போது பன்றியொன்று தினைப்புனத்தை மேய்ந்து அழிப்பதற்கு வந்தது. பன்றியின் காலடியோசை கேட்ட கானவன் பரண்மேல் இருந்தபடியே ஓசைவந்த திசையை நோக்கி அம்பு ஒன்றை வேகமாகச் செலுத்தினான். கானவன் கடுகச் செலுத்திய அம்பு பன்றியின் உடம்பில் பட்டுப் புண் படுத்தியது. புண்பட்ட பன்றி புண்ணுடனும் அம்புடனும் ஓடிப்போனது. ஓடிய பன்றி புண்ணின் வலியின் கடுமையால் மயங்கித் தான் வந்த பாதையை மறந்து வழி மாறிச் சென்று இறந்து வீழ்ந்தது. இதனை

“கழுதிற் சேணோன் ஏவொடு போகி
யிழுதினன்ன வானிணஞ் செருக்கி
நிறப்புண் கூர்ந்த நிலந்தின் மருப்பின்
நெறிகெடக் கிடந்த இரும்பிணர் எருத்தின்
இருள் துணிந்தன்ன ஏனம்” என்று மலைப்படுகடாம் (243 – 47) கூறுகிறது.

மான்வேட்டை
முயலைப் போல மானும் ஒரு சாதுவான ஆபத்தில்லாத விலங்குதான். தற்காலத்தில் தோல், கொம்பு, இறைச்சி ஆகியவற்றுக்காக மான் வேட்டையாடப்படுகிறது. பண்டைக் காலத்திலும் மான் தோல், இறைச்சி ஆகியவற்றுக்காக வேட்டையாடப்பட்டது. வேள்வி செய்யும் காலத்தில் பார்ப்பார் மான் தோலைப் பச்சையாகத் தோளில் போர்த்திக் கொண்டு யாகச்சடங்குங்களைச் செய்தனர் என்று புறநானூறு ( 166 ) கூறுகிறது.

“வினைக்கு வேண்டி நீ பூண்ட
புலப்புல்வாய்க் கலைப் பச்சை
சுவற்பூண் ஞாண் மிசைப் பொலிய”
(வேள்வித் தொழிற்கு வேண்டி நீ போர்க்கப்பட்ட, காட்டு நிலத்தே வாழும் புல்வாய்க் கலையினது உறுப்புத்தோல் நினது தோளின் கண் இடப்பட்ட பூணூல் மீது சிறந்து தோன்றியது) என்று ஆவூர் மூலங்கிழார்அது குறித்துக் கூறுகிறார்.

மானுக்கு இரங்கிய மங்கை
எயினரது குடிசையின் முற்றத்தில் பலாமரம் அல்லது விளாமரம் நிற்கும், அதில் பார்வை மான் கட்டப்பட்டிருக்கும். பார்வைமான் கட்டிய கயிறு உராய்ந்ததால் அம்மரத்தின் அடி தேய்ந்திருந்தது. இதனை,

“பார்வை யாத்த பரைதாழ் விளவு, என்றும்
முன்றில் முஞ்ஞை முசுண்டைபம்பிப்
பந்தர் வேண்டாப் பலாத் தூங்கு நீழல்
கைமான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்
பார்வை மடப் பிணை தழீஇ” – புறாநானூறு : 320
என்றும் சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன.

பார்வைமான் என்பது, பிற மான்களைப் பிடிப்பதற்காகப் பயிற்சிதந்து கட்டப்பட்ட பெண்மான். இதனை எயினர் தம் குடிசையின் முற்றத்தில் இருந்த பலாமரம் அல்லது விளாமரத்தின் அடியில் கட்டி வைத்திருந்தனர். ஆண்மான்கள் புணர்ச்சி வேட்கை கொண்டு மேய்தல் தொழிலைக் கைவிட்டு அதனோடு கூடி விளையாட்டயர அங்கு வரும். கலையும் பிணையும் புணர் நிலைக்கண் விளையாட்டயர்தலைக் காணும் எயினர் இரக்க மின்றிக் கலையை எளிதில் வீழ்த்துவர். அதற்காகப் பயிற்சி தந்து கட்டப்பட்ட பெண்மானே பார்வைமான் என்ப்படும். எயினரின் எளிய குடிசையின் முன் கனிகள் தொங்கும் பலாமரம் ஒன்று நின்றிருந்தது. முன்னைக் கொடியும் முசுண்டைக் கொடியும் அதன் மீது செறிந்து படர்ந்திருந்தன. வேறே பந்தல் வேண்டாது தாமே பந்தராகப் படந்திருந்தன. குடிசையின் முற்றத்தில் மான் தோலைவிரித்து எயிற்றி தினையரிசியைப் பரப்பி உலரவிட்டிருந்தாள். குடிசைக் குரிய வனான எயினன் பலாமரத்தின் நிழலில் படுத்துறங்கிக் கொண்டிருந்தான். அவன் யானை வேட்டம்புரிவோன்: இரவு அவ்வேட்டத்தின் மேற்சென்றிருந்தமையால் பேருறக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.

குடிசையின் பக்கத்தில் பார்வை மானாகிய பெண்மான் கட்டப்பட்டிருந்தது. தொழிலொன்று மில்லாத பிறிதொரு தனி ஆண் மான் வந்து அப்பெண்மானைத் தழுவிக்கலந்து விளையாடிக் கொண்டிருந்தது. அக்குடிசையின் தலைவியான எயிற்றி, குடிசையின் ஒரு பக்கமாக மான் தோலைவிரித்து அதில் தினையரிசியை உலர விட்டிருந்தாள். அவள், இன்பம் மிக்க அவற்றின் புணர்ச்சி நிலையைக் கண்டாள். கண்ட அவள் தன் கணவன் உறக்கம் நீங்கி எழுந்து விடுவானோ என அஞ்சினாள், எழுந்து கலையும் பிணையும் புணர்நிலைக் கண் விளையாட்டயர்தலைக் காணின் அவன் அருளின்றிக்கலையை வீழ்த்துவன் என்று உணர்ந்து, அவன் உறக்கம் கலைந்து எழுவானோ எனவும், தன்வருகையைக் கண்டால் புதிதாக வந்த கலைமான் அஞ்சியோடுமோ, அங்ஙனம் அஞ்சியோடின் அவற்றின் புணர்நிலை இன்பம் சிதையுமோ என்றும் கவன்ற அவள் ஒரு பக்கத்தில் ஒதுங்கியிருந்தாள். அவளது ஒடுக்கம் கானக்கோழியும் இதற் பறவையும் வந்து அவள் மான் தோலில் பரப்பி உலர விட்டிருந்த தினையரிசியைக் கல்லென ஆரவாரித்துக் கவர்நதுண்ண ஏதுவாயிற்று. பின்னர் எயிற்றி வைத்திருந்த கண்ணியில் அகப்பட்டுக் கொண்டன.

கலைமான் பிணைமானைப் புணர்ந்து நீங்கியபின் எயிற்றி அப்பறவைகளைப் பிடித்துத் துண்டு துண்டாக அறுத்து நிறைத்த இறைச்சியைச் சந்தனக்கட்டையாலாகிய நெருப்பில் சுட்டு ஆரல் மீனின் நாற்றமும் உடன்கமழ அவற்றைப் பாணரின்கரிய பெரிய சுற்றத்தார்க்கு உண்ணக்கொடுத்து உபசரித்தாள். இச்செய்தியைச் சுவைபடக் கூறும் வீரைவெளியனாரின் பாடல் இது.

‘முன்றில் முஞ்ஞை முசுண்டை பம்பிப்
பந்தர் வேண்டாப் பலாத்தூங்கு நீழல்
கைமான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்
பார்வை மடப்பிணை தழீஇப் பிறிதோர்
தீர் தொழிற்றனிக்கலை திளைத்து விளையாட
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலு மஞ்சி யாவதும்
இல் வழங்காமையின் கல்லென வொலித்து
மானதட்பெய்த உணங்கு தினை வல்சி
கானக் கோழியோடிதல் கவர்ந்துண்டென
ஆரநெருப்பினாரல் நாறத்
தடிவார்ந்திட்ட முழு வள்@ரம்
இரும்பே ரொக்க லொடொருங்கினி தருந்தித்
தங்கினை சென்மோபாணை”
- புறானூறு 320

வீரைவெளியனாரின் இப்பாடல் கணசமூகத்தலைவியான எயினப்பெண்ணின் இல்லற மாட்சியையும் எவ்வுயிரும் தன்னுயிர் போல் எண்ணிஇரங்கும் உயர்பண்பையும் அவளது விருந்தோம்பற் சிறப்பையும் உலகுக்குத் தெற்றெனப் புலப்படுத்துகிறது.

புலிவேட்டை
வேட்டுவர் புலி வேட்டைக்குச் சென்றனர். வேட்டையின் போது சினமுற்ற புலியானது வேட்டுவன் மீது பாய்ந்து மார்பைக் கிழித்துப்புண்ணாக்கியது. அக்கொடிய புண்ணை ஆற்றுவதற்காகவும் புண்ணின் வலி தெரியாமல் இருப்பதற்காகவும் எயிற்றியர் இனிய பாடல் களைப் பாடினர். அப்பாடல் காடெல்லாம் எதிரொலித்தது.

“கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பில்
நெடுவசி விழுப்புண் தணிமார்; காப்பென
அறல் வாழ் கூந்தல்கொடியச்சியர் பாடல்”

(தம் கணவர் மார்பிலே புலிபாய்ந்ததாகப்பட்ட நெடிய பிளத்தலையுடைய சீரிய புண்ணை ஆற்றுவதற்குக் காவல் என்று கருதி அறல் போலும் கூந்தலையுடைய கொடிச்சியர் பாடும் பாடலால் எழுந்த ஓசை) என்று மலைபடுகடாம் கூறுகிறது.

யானை வேட்டை
கானவர் மலைமேல் பரண் அமைத்துத் தினைப்புனம் காத்தனர். அப்போது, விளங்குகின்ற ஏந்தின கொம்பையுடையதும் தன் இனத்தைப் பிரிந்து வந்ததுமான யானை தினைப்புனத்தைத் தின்னும் பொருட்டு வந்தது. யானைத் தலைவனான அதனை வளைத்துப் பிடித்தற்காகக் கானவர் கூடிமுயன்றனர். அதனால் ஏற்பட்ட ஆரவாரம் கானகமெங்கும் எதிரொலித்தது.

‘விலங்கல் மீமிசைப் பணவை கானவர்
புலம்புக் குண்ணும் இலங்கேந்து மருப்பின்
இனம்பிரி ஒருத்தல் புரிவளை பூசல்” என்று, மலைபடுகடாம் ( 277-99)
எயினரின் யானை வேட்டம் குறித்துக் கூறுகிறது.

இதுகாறும் கூறிய செய்திகளால் கானவர்; உடும்பு, முயல், பன்றி, முள்ளம் பன்றி, மான், புலி, யானை முதலிய காட்டு விலங்குகளை வேட்டையாடினர். அவ்வேட்டத்தின் போது பல்வகை இன்னல்களுக்கு ஆளாயினர் என்பதை அறிந்தோம். வேட்டைத் தொழில் கானவரின் கூட்டு முயற்சியாகவே இருந்தது.

கானவர் தேனெடுத்தல்
குரங்குகளும் ஏற முடியாத உயரத்தையுடையதும் இனிதாகக் காட்சி தருவதுமான உயர்ந்த மலையில் தேனீக்கள் தேனைத் திரட்டிக் கூடுகட்டியிருந்தன. கானவர் அத்தேனை எடுக்க முயன்றனர். நிலைபேறுண்டாகக் கட்டியமைத்தகண்ணேணி வழியாக ஏறிச் சென்று அத்தேன் கூட்டை யழித்துத் தேனெடுத்தனர். அதனால் எழுந்த மகிழ்ச்சியால் மிகுதியாக ஆரவாரித்தனர். அந்த ஆரவாரம் மலையெங்கும் எதிரொலித்தது. கண்ணேணியாவது, கணுக்களிலே அடிவைத்து ஏறிச் செல்லும்படி அமைத்துள்ள மூங்கில் ஏணியாகும். மலையுச்சியில் உள்ள தேனிறாலை அழிக்கும் பொருட்டாகச் செங்குத்தாக மூங்கில்களைக் கூட்டி ஏணியாக நிறுத்தி வைத்து அதன் வழியாக ஏறிச் சென்று கானவர் தேனெடுப்பர்.

“கலைகையற்ற காண்பினெடுவரை
நிலைபெய்திட்ட மால்பு நெறியாகப்
பெரும்பயன் தொடுத்த தேங்கொள் கொள்ளை”

என்று கானவர் கண்ணேணி வழியாக ஏறிச்சென்று தேனெடுத்த செய்தியை மலைபடுகடாம் ( 315-17) கூறுகிறது. ( மால்பு கண்ணேணி ) பாரியின் பறம்பு மலையில் தேனெடுத்தற்காகக்;கானவர்கண்ணேணிகள் அமைத்த செய்தியைக் கபிலர் கவினுறக் கூறுகிறார். மால்புடை நெடுவரைக் கோடு” ( புறநானூறு 105) ( கண்ணேணியையுடைய நெடிய மலையினது சிகரம் ) என்பது கபிலரது கூற்று,

“அணிநிற ஓரி பாய்தலின் மீதழிந்து
திணி நெடுங்குன்றம் தேன் சொரியும்மே “என்றும்
“நறவுப் பிழிந்திட்ட கோதுடைச் சிதறல்
வாரசும் பொழுகு முன்றிற்
தேர்வீசிருக்கை நெடியோன் குன்றே “ புறம் : 114

( மதுப் பிழிந்து போகடப்பட்ட கவளத்தினது கோதுடைத்தாகிய சிதறிய வற்றினின்றும் வார்ந்த மதுச் சேறு ஒழுகும் முற்றத்தையுடைய தேர்வழங்கும் இருப்பையுடைய உயர்ந்தோனுடைய மலை ) என்றும்

‘ஒரு சார் அருவி ஆர்ப்ப வொருசார்
பாணர்மண்டை நிறையப்பெய்மார்
வாக்கவுக்க தேக்கட்டேறல்
கல்லலைத் தொழுகும்” – புறநானூறு : 115

( ஒரு பக்கம் அருவி ஆர்த் தொழுக, ஒரு பக்கம் பாணருடைய மண்டைகள் ( கலங்கள்) நிரம்ப வாக்க வேண்டி வடித்தலால் சிந்திய இனிய கள்ளாகிய தேறல் கல்லையுருட்டி ஒழுகும் ) என்றும் பறம்புமலையின் தேன் வளம் குறித்தும் கானவர் அங்கு தேனெடுத்தது குறித்தும் தேன் சுவை சொட்டக் கபிலர் கூறுகிறார்.

பழந்தமிழ்க் காப்பியங்களான

பழந்தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம்,மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறுமுதலியவற்றில் கொல்லி மலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் கிபி 200-ல், இந்தப் பகுதியை கடையெழு வள்ளல்களில்ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தான். ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும்காட்டுப் பன்றியைக் கொன்றதாக வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து பல பாடல்கள் உள்ளன.


கொல்லி ஆண்ட வல்வில் ஓரி’
- பெருஞ்சித்திரனார் – புறம் 158
வல்வில் ஓரியும் கொல்லிப் பொருநன் என்று குறிப்பிடப்படுகிறான்.
- வன்பரனர் புறம் 152
வல்வில் ஓரி கொல்லிமலை அரசன்
- கபிலர் – குறுந்தொகை 100,
பரணர் - அகம் 208

கொங்கு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் பேரவை

அன்புள்ள கொங்கு வேட்டுவக்கவுண்டர்கள் உறவினர்களுக்கு வணக்கம்,,,

இணைப்பு படங்கள் பார்த்ததும் ஏதோ பாழடைந்த கோவில் மாதிரி தெரிகிறதா? இதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா?
இது தாங்க நமது அனைத்து வேட்டுவருக்கும் பொதுவான குலதெய்வம்
தலையூர் பிரம்மா காளி கோவில். இக்கோயில் தற்போது பதுப்பிக்கப்படாமல் சிதைந்துள்ள...து. இத்தனை வேட்டுவக்கவுண்டர்கள்
இருந்து என்ன பிரயோசனம். இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம்
செய்ய முடியவில்லை. நம்ம சமூகத்தில் இருந்து அரசியல்வாதிகள் வந்தாங்க, எம்.எல்.எ, எம்.பி ஆனாங்க இந்தகோவிலை புதுப்பிக்க யாராவது
முன் வந்தார்களா? நம்ம சமூகத்தில் உள்ள சில பெரிய மனிதர்கள் நான்
வேட்டுவக்கவுண்டன் இல்லை என்று வேறு உயர்ந்த சாதிப்பெயரை சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். ஏன்ன நம்ம சமூகம் அந்த அளவுக்கு
கேவலமாக போய்விட்டதா? இது எங்க குல தெய்வம் கோவில் என்று
சொல்ல வெட்கமாக இல்லையா? இந்த அளவுக்கு கோவில் சிதைந்து
போய் இருப்பதை கண்டும் கானமலும் வருடத்திற்கு ஒரு முறை மாசி திருவிழா கொண்டாடுகிறோம். இந்த சமயத்திலாவது நம்ம சமூகத்தினர்
சிந்திப்பார்களா????????????????????????????????

கொங்கு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் பேரவை

+91 9688971001